அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஹீமோபிலியாவுக்கான மரபணு சிகிச்சையில் இந்தியா சாதனை டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
24 APR 2025 4:30PM by PIB Chennai
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் மற்றும் பிரதமர் அலுவலகம், அணுசக்தி, விண்வெளி, பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், பிரிக்-இன்ஸ்டெமில் உள்ள பல்வேறு வசதிகளை ஆய்வு செய்து, முதன்மை மருத்துவ நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுடன் இணைந்து நடைபெற்று வரும் மருத்துவப் பரிசோதனைகளையும் ஆய்வு செய்தார்.
இதில் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஹீமோபிலியாவுக்கு ( ரத்தம் உறையா நோய்) மரபணு சிகிச்சை சோதனையும் அடங்கும்.
இந்தியாவின் அறிவியல் பயணத்தில் ஒரு மைல்கல் என்று இதனைக் குறிப்பிட்ட அமைச்சர், தடுப்பு மற்றும் மீளுருவாக்கம் செய்யும் சுகாதாரப் பராமரிப்பில் நிறுவனங்களின் பங்களிப்புகளைப் பாராட்டினார்.
டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவின் எதிர்காலப் பொருளாதாரம் மற்றும் பொது சுகாதார உள்கட்டமைப்பை வடிவமைப்பதில் உயிரி தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார். இது அறிவியலைப் பற்றியது மட்டுமல்ல - இது தேசத்தைக் கட்டியெழுப்புவது பற்றியது, என்று கூறிய அவர், உயிரி தொழில்நுட்பத் துறையின் (டிபிடி) சமீபத்திய வெற்றிகளையும், ஒப்பீட்டளவில் தெளிவற்ற நிலையில் இருந்து தேசிய பொருத்தத்திற்கு அது வெளிப்பட்டதையும் பாராட்டினார்.
இந்தியாவின் உயிரி தொழில்நுட்பத் துறை ஒரு அசாதாரண வளர்ச்சியைக் கண்டுள்ளது, கடந்த தசாப்தத்தில் 16 மடங்கு அதிகரித்து 2024 ஆம் ஆண்டில் 165.7 பில்லியன் டாலரை எட்டியுள்ளது, 2030 ஆம் ஆண்டில் 300 பில்லியன் டாலரை எட்டும் நோக்குடன். உயிரி தொழில்நுட்பம் மூலம் பொருளாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பயோ-இ3 (BIO-E3) கொள்கை உட்பட பல கொள்கை சீர்திருத்தங்களை செயல்படுத்தியதே இந்த வளர்ச்சிக்கு காரணம் என்று அமைச்சர் கூறினார். ஒரு தசாப்தத்திற்கு முன்பு வெறும் 50 நிறுவனங்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது, 10,000 க்கும் மேற்பட்ட உயிரி தொழில்நுட்பப் புத்தொழில் நிறுவனங்கள் உள்ளன, என்று அவர் சுட்டிக்காட்டினார்.
14 தன்னாட்சி நிறுவனங்களை ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைக்கும் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு கவுன்சில் (BRIC) உருவாக்கப்பட்டதற்கு டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டு தெரிவித்தார். இந்தியாவின் ஒரே சுகாதார திட்டத்தின் கீழ் அதிக ஆபத்துள்ள நோய்க்கிருமிகளை ஆய்வு செய்வதற்கான முக்கிய தேசிய வசதியான பிரிக்-இன்ஸ்டெமின் உயிர் பாதுகாப்பு நிலை III ஆய்வகம் இந்தப் பயணத்தின் சிறப்பம்சமாகும். நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்பதை சமீபத்திய தொற்றுநோய் நமக்குக் கற்றுக் கொடுத்தது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
அறிவியல் மற்றும் மருத்துவ நிறுவனங்களுக்கு இடையே அதிக ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுத்த அவர், பிரிக்-இன்ஸ்டெம் எம்.டி-பி.எச்.டி திட்டங்களை ஆராயவும், மருத்துவ ஆராய்ச்சியுடன் மேலும் ஒருங்கிணைக்கவும், ஒருங்கிணைந்த தகவல்தொடர்பு உத்திகள் மூலம் தெரிவுநிலையை மேம்படுத்தவும் பரிந்துரைத்தார்.
இந்தியாவின் எதிர்காலப் பொருளாதாரம் உயிரி அடிப்படையிலானதாக இருக்கும் என்றும், பிரிக்-இன்ஸ்டெம் போன்ற அமைப்புகள் இந்த மாற்றத்தின் வழிகாட்டிகளாக செயல்படும் என்றும், உயிரி தொழில்நுட்பம் என்பது வெறுமனே ஒரு அறிவியல் மட்டுமல்ல - அது நமது தேசிய உத்தியின் ஒரு தூணாகும் என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2124073
***
TS/PKV/KPG/DL
(Release ID: 2124149)
Visitor Counter : 14