அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இயற்கையால் இயங்கக் கூடிய உள்நாட்டு உள்ளக காற்று சுத்திகரிப்பு முறையான 'யுபிரீத் லைஃப் ' புத்தாக்கத்துக்கு தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் ஆதரவு
Posted On:
24 APR 2025 4:13PM by PIB Chennai
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், குருகிராமில் உள்ள அர்பன் ஏர் லேப்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு "உட்புற வளாகங்களுக்கான உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட காற்று சுத்திகரிப்பு அமைப்பின் மேம்பாடு மற்றும் வணிகமயமாக்கல் என்ற திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதன் மூலம் உள்நாட்டில் தூய்மையான காற்றுக்கான தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. இந்த உத்திசார் நடவடிக்கைகள் காற்றில் உள்ள மாசுக்களை அகற்றுவதில் புதுமையான, தாவர அடிப்படையிலான சுத்திகரிப்பு அமைப்புகள் மூலம் உட்புற காற்றின் தரக் குறியீட்டை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டைக் குறிக்கிறது.
இந்த திட்டத்திற்கான நிதியுதவி நிலையான, அறிவியல் ஆதரவுடன் காற்று சுத்திகரிப்பு தீர்வுகளை வழங்குவதற்கான திட்டத்திற்கு உதவுகிறது. 'இந்தியாவில் உற்பத்தி செய்வோம்' மற்றும் 'தற்சார்பு இந்தியா' போன்ற திட்டங்களின் கீழ் இந்தியாவை தற்சார்புமிக்க நாடாக உருவெடுக்க செய்யும் அதே வேளையில், பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்வதற்கான தொழில்நுட்பங்களில் புதுமைகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
***
(Release ID: 2124065)
TS/SV/RR/KR
(Release ID: 2124098)
Visitor Counter : 13