இந்திய போட்டிகள் ஆணையம்
ஏஏஎம் இந்தியா மெனுஃபேக்சரிங் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 100% பங்குகளை பாரத் ஃபோர்ஜ் லிமிடெட் கையகப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்ட இணைப்புக்கு சிசிஐ ஒப்புதல்
प्रविष्टि तिथि:
23 APR 2025 2:59PM by PIB Chennai
ஏஏஎம் இந்தியா மெனுஃபேக்சரிங் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 100% பங்குகளை பாரத் ஃபோர்ஜ் லிமிடெட் கையகப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்ட இணைப்புக்கு இந்திய போட்டி ஆணையம் (சி.சி.ஐ.)ஒப்புதல் அளித்துள்ளது.
பாரத் ஃபோர்ஜ் லிமிடெட் என்பது வாகனம், ரயில்வே, பாதுகாப்பு, கட்டுமானம், சுரங்கம், விண்வெளி, எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்குத் தேவையான உதிரி பாகங்கள் மற்றும் தீர்வுகளை வழங்கும் உலகளாவிய நிறுவனமாகும். இது இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் சில உதிரி பாகங்கள் உட்பட உலோக ஃபோர்ஜிங் தயாரிப்புகளை உற்பத்தி செய்து வழங்குகிறது.
ஏஏஎம் இந்தியா மெனுஃபேக்சரிங் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் என்பது இந்தியாவைச் சேர்ந்த வணிக வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் ஏஏஎம் நிறுவனத்தின் 100% ஈக்விட்டி பங்குகளை கையகப்படுத்துவதற்கு பாரத் ஃபோர்ஜ் லிமிடெட் நிறுவனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரால் முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்கு இணங்க முன்மொழியப்பட்ட இணைப்புக்கு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
***
(Release ID: 2123770)
TS/PLM/RR/KR
(रिलीज़ आईडी: 2123823)
आगंतुक पटल : 35