அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
பேரிடர் மேலாண்மை மற்றும் கண்காணிப்பை மேம்படுத்துவதற்கு ட்ரோனை பயன்படுத்தும் நெக்டார் ஆராய்ச்சி நிலையம்
Posted On:
22 APR 2025 3:54PM by PIB Chennai
வன கண்காணிப்பு, வனவிலங்கு கண்காணிப்பு, எல்லை மற்றும் பேரழிவு கண்காணிப்பு ஆகியவை விரைவில் எளிதாக மாற உள்ளன. இதற்கு வாயுவால் இயக்கப்படும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் தொடர்புக்கான வடகிழக்கு ஆராய்ச்சி மையம் (நெக்டார்), குர்கானில் உள்ள ஏர்போடிக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் உருவாக்கிய தொழில்நுட்பம் குறித்த நேரடி செயல்விளக்கத்திற்கு ஏற்பாடு செய்தது.
வனக் கண்காணிப்பு, வன உயிரின கண்காணிப்பு, எல்லை மற்றும் பேரிடர் கண்காணிப்பு பயன்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்கு அதிக தாங்குதிறன், நிலையான திறன்களுடன் ஏரோஸ்டேடிக் ட்ரோன்கள் இந்தியாவிலேயே முதன்முறையாக வடிவமைக்கப்பட்டது.
ஏரோஸ்டேடிக் ட்ரோன்கள் தொடர்ச்சியான கண்காணிப்பை குறைந்த செலவில் வழங்குவதுடன் பல்துறை தீர்வாகவும் அமைகின்றன.
ஏரோஸ்டேடிக் ட்ரோன் ஒரு அமைதியான வான்வழி தளத்தை வழங்குகிறது. இது 4 மணி நேரத்திற்கும் மேலாக கண்காணிப்புக்காக தொடர்ந்து மிதக்க முடியும் . இந்த அமைப்பு எந்த தரை வாகனத்துடனும் ஒருங்கிணைக்கவும் அல்லது எந்த தளத்திலும் இயங்கவும் முடியும்.
பகல் மற்றும் இரவு என எந்தக் கால சூழலிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த ட்ரோனில் உள்ள கேமராக்கள் அதன் பயன்பாட்டை மேலும் மேம்படுத்துகின்றன. குறிப்பாக வேட்டையாடுதல், கடத்தல் மற்றும் மரம் வெட்டுதல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக காடுகளைக் கண்காணிப்பதிலும், எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தவும் இது உதவுகிறது.
சிஆர்பிஎஃப் அதிகாரிகள் ட்ரோன் செயல்பாடுகளை மேம்படுத்துவது குறித்து மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக எல்லை கண்காணிப்பு மற்றும் சவாலான நிலப்பரப்புகளின் பாதுகாப்பில் வெப்ப கேமராக்களைப் பயன்படுத்தி பகல் மற்றும் குறைந்த வெளிச்சத்தில் செயல்படும் இந்த ட்ரோன்கள் திறன் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க சொத்தாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2123451
***
(Release ID: 2123451)
TS/GK/RR/KR
(Release ID: 2123489)
Visitor Counter : 29