நித்தி ஆயோக்
azadi ka amrit mahotsav

நாட்டின் கை கருவிகள் மற்றும் மின் கருவிகள் தொழில் பிரிவு 25 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஏற்றுமதி வாய்ப்புகளைக் கொண்டுள்ளது

प्रविष्टि तिथि: 22 APR 2025 3:23PM by PIB Chennai

அறிமுகம்

கை  கருவிகள் மற்றும்  மின்சக்தியால் இயங்கும் கருவிகள் தொழில்  பிரிவானது உலகளாவிய உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பின்  அடித்தளமாக விளங்குகிறது. இது கட்டுமானம், வாகனம், மின்னணுவியல் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற பல துறைகளில் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.  ஏப்ரல் 2025-ல், நிதி ஆயோக்  மற்றும்  பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளை ஆகியவை  இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் கை கருவிகள் மற்றும் மின்சக்தி கருவிகள் தொழில் பிரிவானது 25 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஏற்றுமதி வாய்ப்புகளைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.  இது இந்தியாவின் உலகளாவிய ஏற்றுமதியை  தற்போதைய 1 பில்லியன் டாலரில்  இருந்து  2035-க்குள் 25 பில்லியன் டாலராக  உயர்த்துவதற்கான விரிவான திட்டத்தை வகுத்துள்ளது.

இந்தப் பிரிவில் இந்தியாவின் தற்போதைய ஏற்றுமதித் தடம் மிதமானதாகவே உள்ளது. இருப்பினும் அது முக்கிய சாதகங்களைக்  கொண்டுள்ளது.

இந்தியாவின் தற்போதைய ஏற்றுமதி விவரம்

நாட்டின் கை கருவிகள் மற்றும் மின்சக்தி கருவிகள் தொழில் பிரிவானது பஞ்சாப்  (ஜலந்தர், லூதியானா)மகாராஷ்டிரா  (மும்பை, நாக்பூர்) மற்றும்  ராஜஸ்தான்  (நாகவுர்) ஆகிய இடங்களில் முக்கிய உற்பத்தி கிளஸ்டர்களுடன்  ஒரு வலுவான சுற்றுச்சூழல் அமைப்பை  உருவாக்கியுள்ளது.  பொதுவான ஏற்றுமதிகளில் குறடுகள், இடுக்கி, ஸ்க்ரூடிரைவர்கள் மற்றும் கை ரம்பம் ஆகியவை அடங்கும்.

தற்போதுள்ள அரசு ஆதரவு பொறிமுறைகள்

•     ஏற்றுமதி செய்யப்பட்ட தயாரிப்புகள் மீதான வரிகளைத் தள்ளுபடி செய்தல்:ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் மீதான வரிகள் தள்ளுபடியை மத்திய அரசு வழங்குகிறது. இது இந்திய ஏற்றுமதியாளர்களை சர்வதேச சந்தைகளில் அதிக போட்டித்தன்மையுடன் செயல்பட உதவுகிறது.

இந்தியா அதன் தொழில்துறை மாற்றத்தில் ஒரு முக்கிய கட்டத்தில் உள்ளது. கை கருவிகள் பிரிவு தற்போது உலகளாவிய வர்த்தகத்தில் குறைவாக பிரதிநிதித்துவம் செய்யப்பட்டாலும், சீனாவுக்கு நம்பகமான உற்பத்தி மாற்றாக இந்தியாவை நிலைநிறுத்த ஒரு அரிய  வாய்ப்பை வழங்குகிறது. நிதி ஆயோக் முன்வைத்துள்ள திட்டம், இந்தியாவின் உள்ளார்ந்த பலங்களான அபரிமிதமான உழைப்பு, அதிகரித்து வரும் உற்பத்தித் தளம் மற்றும் துறைசார் ஒத்திசைவுகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

***

(Release ID: 2123437)
TS/GK/RR/KR

 


(रिलीज़ आईडी: 2123478) आगंतुक पटल : 42
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी