விவசாயத்துறை அமைச்சகம்
வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையின் செயலாளராகவும் இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் தலைமை இயக்குநராகவும் டாக்டர் மங்கி லால் ஜாட் பொறுப்பேற்றார்
Posted On:
21 APR 2025 1:05PM by PIB Chennai
வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையின் செயலாளராகவும் இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் தலைமை இயக்குநராகவும் டாக்டர் மங்கி லால் ஜாட் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழு கடந்த வாரம் இப்பொறுப்பிற்கு அவரை நியமித்தது. டாக்டர் மங்கி லால் 3 ஆண்டுகளுக்கு இப்பொறுப்பை வகிப்பார். முன்னதாக அவர், ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் உலகளாவிய ஆராய்ச்சி திட்ட இயக்குனராகவும் துணைத் தலைமை இயக்குனராகவும் (ஆராய்ச்சி) பணியாற்றினார்.
நீடித்த வேளாண்மையில் உலகளவில் மதிக்கப்படுபவரான டாக்டர் ஜாட், வேளாண் அறிவியல், பருவநிலை நெகிழ்திறன் வேளாண்மை மற்றும் வேளாண்மை பாதுகாப்பு ஆகியவற்றில் 25 ஆண்டுகளுக்கும் மேலான சிறந்த அனுபவத்தை கொண்டவர் ஆவார். அவரது நியமனம் இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் மற்றும் பரந்த வேளாண் சுற்றுச்சூழல் அமைப்பிற்குள் புதுமை, நிலைத்தன்மை ஆகியவற்றில் புதிய சகாப்தத்தை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுதில்லியில் உள்ள ஐ.சி.ஏ.ஆர் - இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் மாணவரான டாக்டர் ஜாட், வறண்ட பிராந்தியங்களில் உணவுப் பாதுகாப்புக்கு முக்கியமான தானியத்தில் மண் ஈரப்பதத்தைப் பாதுகாப்பதில் நிபுணத்துவத்துடன் வேளாண் அறிவியலில் பி.எச்.டி பெற்றுள்ளார். அவரது முன்னோடி ஆராய்ச்சி ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் உள்ள சிறு விவசாயிகளுக்கு நிலையான தீவிரப்படுத்தல் உத்திகளை வடிவமைத்துள்ளது.
***
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2123110
TS/IR/LDN/KR
(Release ID: 2123126)
Visitor Counter : 22