சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ரத்த சோகைக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் - ஊட்டச்சத்து, நோய்த்தடுப்பு, பாதுகாப்பு
Posted On:
18 APR 2025 12:33PM by PIB Chennai
உலகின் மிகப்பெரிய வளரிளம் பருவ மக்கள்தொகையைக் கொண்ட நாடு இந்தியா. இந்தியா, ரத்த சோகைக்கு எதிராக குறிக்கோள் நிரம்பிய பொது சுகாதார இயக்கத்தைச் செயல்படுத்தி வருகிறது. கோடிக்கணக்கானவர்களை, குறிப்பாக பெண்கள், குழந்தைகள், இளம் பருவத்தினரை ரத்த சோகை நோய் தொடர்ந்து பாதிக்கிறது. ரத்த சோகை, முதன்மையாக இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படுகிறது. இது குறைந்த ஹீமோகுளோபின் அளவின் விளைவாக, முக்கிய உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் ரத்தத்தின் திறனைக் குறைக்கிறது. ஃபோலேட், வைட்டமின் பி 12, வைட்டமின் ஏ ஆகியவற்றின் குறைபாடுகள் ரத்த சோகை ஏற்படுவதற்கான பிற ஊட்டச்சத்து காரணங்களாகும். இது ஒரு பொது சுகாதார சவாலாக அமைகிறது.
ரத்த சோகை தடுக்கக்கூடியது மற்றும் சிகிச்சையளிக்கக்கூடியதாகும். கடந்த 20 ஆண்டுகளாக, மத்திய அரசு அதை எதிர்த்துப் போராட வலுவான, நடவடிக்கையை எடுத்துள்ளது. 1998-99-ம் ஆண்டில் இரண்டாவது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு மூலம் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனை ஏற்பட்டது. இது ரத்த சோகை இல்லாத இந்தியா போன்ற முக்கிய திட்டங்களுக்கு வழி வகுத்தது. இன்று, அனைத்து வயதினரும் இரும்பு-ஃபோலிக் அமில இணை பொருட்கள், குடற்புழு நீக்கம், வலுவூட்டப்பட்ட ஊட்டச்சத்து உணவு, தகவல் தொடர்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான உத்தியின் மூலம் ஆண்டுதோறும் பயன் அடைந்து ரத்த சோகையில் இருந்து விடுபடுகின்றனர்.
உலகளவில் 15 முதல் 49 வயதுக்குட்பட்ட சுமார் 500 மில்லியன் பெண்களையும், 5 வயதுக்குட்பட்ட 269 மில்லியன் குழந்தைகளையும் ரத்த சோகை பாதித்துள்ளது. 2019-ல் கர்ப்பிணி அல்லாத பெண்களில் சுமார் 30% (539 மில்லியன்) பேருக்கு ரத்த சோகை இருந்தது. கர்ப்பிணிப் பெண்களில் சுமார் 37% (32 மில்லியன்) பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
பல்வேறு தரப்பு மக்களிடையே ரத்த சோகை பாதிப்பை உணர்ந்து, இந்திய அரசு அதை ஒழிக்க உறுதிபூண்டுள்ளது. சுகாதாரம் ஒரு மாநில விஷயமாக இருந்தாலும், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தேசிய சுகாதார இயக்கம் மூலம் நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதன் மூலம் மத்திய அரசு உதவுகிறது.
நீடித்த நடவடிக்கைகள், வலுவான கடைசி நிலைவரையான விநியோகம் ஆகியவற்றுடன், ஆரோக்கியமான, ரத்த சோகை இல்லாத இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை எட்டும் வகையில் இந்தியா செயல்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த இணையதள இணைப்புகளைப் பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2122623
https://www.who.int/news-room/fact%20sheets/detail/anemia#:~:text=Key%20facts,age%20are%20affected%20by%20anemia
https://www.who.int/health-topics/anaemia#tab=tab_1
https://www.unicef.org/india/stories/forging-anemia-free-future
https://www.who.int/news-room/fact-sheets/detail/anaemia
https://nhm.gov.in/index1.php?lang=1&level=3&sublinkid=1448&lid=797
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1795421
https://mohfw.gov.in/sites/default/files/Final%20Printed%20English%20AR%202024-25.pdf
https://health.vikaspedia.in/viewcontent/health/health-campaigns/national-iron-plus-initiative?lgn=en
https://nhm.gov.in/index1.php?lang=1&level=3&sublinkid=1024&lid=388
https://www.nhm.gov.in/images/pdf/Nutrition/AMB-guidelines/Anemia-Mukt-Bharat-Operational-Guidelines-FINAL.pdf
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2024/3dec/doc20241228477601.pdf
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/182/AU3031_DVkg7s.pdf?source=pqals
***
(Release ID: 2122623)
SV/PLM/RJ
(Release ID: 2122670)
Visitor Counter : 88