தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
சி-டாட் மற்றும் ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் நிறுவனம் இணைந்து நாட்டின் முதல் குவாண்டம் கீ டிஸ்ட்ரிபியூஷன் செலுத்துதலை வெற்றிகரமாகப் பரிசோதித்து உள்ளன
प्रविष्टि तिथि:
17 APR 2025 4:49PM by PIB Chennai
தொழில்நுட்பத் துறையில் ஒரு முக்கிய சாதனையாக, சி-டாட் ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து, நாட்டின் முதலாவது க்யூ.கே.டி மாற்றியின் மூலம் 4 பன்முக செயல்திறன் கொண்ட கண்ணாடி இழை நார் தகவல் தொடர்பு செயல்பாடுகளை வெற்றிகரமாகச் சோதித்துப் பார்த்துள்ளது. இது குவாண்டம் தொழில்நுட்பத்தின் பாதுகாப்பான தகவல்தொடர்பு கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான செயல்பாடுகளின் ஒரு சாதனை முயற்சியாக அமைந்துள்ளது.
இந்தத் தொழில்நுட்பம் வாயிலாக தரவு பரிமாற்ற செயல்பாடுகளுக்குத் தேவையான தீர்வை வழங்குகிறது. இந்தத் தொழில்நுட்பம் உள்கட்டமைப்பு வசதிகளுக்கான செலவுகளை கணிசமான அளவில் குறைக்கிறது. க்யூ.கே.டி தொழில்நுட்பச் சூழலில் இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். குவாண்டம் மற்றும் கிளாசிக்கல் தரவுகளுக்கான சமிக்ஞைகளை ஒற்றை கண்ணாடி இழை நார் வழியாக தனித்தனி கோர்களாக பிரிக்க உதவுகிறது. இத்தகைய தொழில்நுட்பங்கள் அதிகத் திறன் கொண்ட தரவு போக்குவரத்தை ஒரே சமயத்தில் அனுப்ப உதவுவதுடன் கட்டமைப்புச் செலவுகளை வெகுவாக குறைக்கவும் உதவுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2122447
------
TS/SV/KPG/KR/DL
(रिलीज़ आईडी: 2122514)
आगंतुक पटल : 56