இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம்
தேசிய ஒரே சுகாதார இயக்கத்திற்கான அறிவியல் வழி நடத்தல் குழு கூட்டம் தில்லியில் நடைபெற்றது
இடுகை இடப்பட்ட நாள்:
16 APR 2025 6:12PM by PIB Chennai
தேசிய ஒரே சுகாதார இயக்கத்திற்கான வழிநடத்தல் குழுவின் இரண்டாவது கூட்டம் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் திரு அஜய் கே. சூட் தலைமையில் தில்லியில் நேற்று (ஏப்ரல் 15, 2025) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சுகாதாரம், ஆயுஷ் உள்ளிட்ட அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். ஒரே சுகாதார இயக்கத்தை செயல்படுத்துவதற்கு பங்களிக்கும் பல முக்கிய முயற்சிகள் குறித்தும் இந்த முயற்சிகளை எவ்வாறு மறுசீரமைக்கலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கண்காணிப்பு முறைகள், தடுப்பூசிகள், நோயறிதல் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துதல் குறித்தும், நிதி வழிமுறைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2122180
***
TS/PLM/AG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2122218)
வருகையாளர் எண்ணிக்கை : 48