பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய விமானப்படை மார்ஷல், பத்மவிபூஷண் அர்ஜன் சிங் பிறந்த நாள் கொண்டாட்டங்கள்
प्रविष्टि तिथि:
16 APR 2025 4:26PM by PIB Chennai
2025 ஏப்ரல் 15-ம் தேதி, இந்திய விமானப்படையின் மார்ஷல் பத்ம விபூஷண் அர்ஜன் சிங்கின் 106-வது பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையில், தில்லி துக்ளகாபாத்தின் அஸ்தாவில் உள்ள மூத்த குடிமக்கள் இல்லத்தில் அவரது மார்பளவு சிலை திறந்து வைக்கப்பட்டது.
பராமரிப்பு பிரிவு விமானப்படை தலைமை அதிகாரி மார்ஷல் விஜய் குமார் கார்க் மற்றும் விமானப்படை முன்னாள் மார்ஷல் ஜக்ஜீத் சிங் (ஓய்வு), மூத்த துணைத்தலைவர் விமானப்படை சங்கம் ஆகியோர் சிலையைத் திறந்து வைத்தனர்
இந்த நிகழ்ச்சியில் திருமதி ரிது கார்க், துக்ளக்பாத் விமானப்படை வீரர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மார்ஷல் அர்ஜன் சி ங்கின் உருவச் சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த சிலையானது அவரது துணிச்சல், தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய தலைமைப் பண்பு நாட்டிற்காக அவர் ஆற்றிய தன்னலமற்ற சேவையை அடையாளப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 1965-ம் ஆண்டு நடைபெற்ற போரின் போது, விமானப் படை வீரர்களுக்கு அவர் தலைமைப் பொறுப்பு ஏற்றிருந்தார். அவரது உத்திசார் நடவடிக்கைகள் மற்றும் உறுதியான முடிவுகள் குறித்தும் பார்வையாளர்களுக்கு விவரிக்கப்பட்டது. அவரது சீ்ரிய தலைமையின் கீழ், அக்னூர் பகுதியில் பாகிஸ்தானின் கவச வாகனத்தை இந்திய விமானப்படையின் உறுதியான வான்வழி தாக்குதல் தகர்த்தது. இதன் காரணமாக இந்தப் போரின் வெற்றி இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது.
----
(Release ID: 2122108)
TS/SV/KPG/KR
(रिलीज़ आईडी: 2122156)
आगंतुक पटल : 41