வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
2023-24 நிதியாண்டோடு ஒப்பிடுகையில் கடந்த நிதியாண்டில்(2024-25) ஒட்டுமொத்த ஏற்றுமதி 5.50 சதவீதம் உயர்வு
Posted On:
16 APR 2025 8:48AM by PIB Chennai
கடந்த நிதியாண்டில் (2024-25) ஏப்ரல்-மார்ச்) நாட்டின் ஏற்றுமதி, முந்தைய நிதியாண்டுடன்(2023-24) ஒப்பிடுகையில் 5.50 சதவீதம் அதிகரித்துள்ளது.
2023-24 நிதியாண்டில் பொருட்கள், சேவைகள் என இரண்டின் ஏற்றுமதியும் 778.13 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. கடந்த நிதியாண்டில் (2024-25) ஒட்டுமொத்த ஏற்றுமதி 5.50 சதவீதம் அதிகரித்து 820.93 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
2024-25-ம் நிதியாண்டில் காபி, மின்னணுப் பொருட்கள், அரிசி, இறைச்சி, பால், தேயிலை, ஜவுளி, மருந்துகள், கனிமங்கள், பொறியியல் பொருட்கள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றின் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துக் காணப்பட்டது.
2023-24-ம் நிதியாண்டில் காபி ஏற்றுமதி 1.29 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 2024-25-ம் நிதியாண்டில் 1.81 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. இது 40.37 சதவீதம் அதிகமாகும்.
மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 2023-24-ம் நிதியாண்டில் 29.12 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 2024-25-ம் நிதியாண்டில் 38.58 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்து 32.47% உயர்ந்துள்ளது.
அரிசி ஏற்றுமதி 2023-24-ம் நிதியாண்டில் 10.42 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 2024-25-ம் நிதியாண்டில் 19.73% அதிகரித்து 12.47 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.
இறைச்சி, பால் பொருட்கள் மற்றும் கோழிப்பண்ணை பொருட்கள் ஏற்றுமதி 2023-24-ம் நிதியாண்டில் 4.53 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 2024-25-ம் நிதியாண்டில் 5.1 பில்லியன் அமெரிக்க டாலராக 12.57% அதிகரித்துள்ளது.
தேயிலை ஏற்றுமதி 2023-24-ம் நிதியாண்டில் 0.83 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 2024-25-ம் நிதியாண்டில் 0.92 பில்லியன் அமெரிக்க டாலராக 11.84% அதிகரித்துள்ளது.
அனைத்து ஜவுளிகளின் ஆயத்த ஆடை ஏற்றுமதி 2023-24-ம் நிதியாண்டில் 14.53 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 2024-25-ம் நிதியாண்டில் 15.99 பில்லியன் அமெரிக்க டாலராக 10.03% அதிகரித்துள்ளது.
மருந்துகள் ஏற்றுமதி 2023-24-ம் நிதியாண்டில் 27.85 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 2024-25-ம் நிதியாண்டில் 30.47 பில்லியன் அமெரிக்க டாலராக 9.39% அதிகரித்துள்ளது.
பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி 2023-24-ம் நிதியாண்டில் 109.3 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 2024-25-ம் நிதியாண்டில் 116.67 பில்லியன் அமெரிக்க டாலராக 6.74% அதிகரித்தது.
பழங்கள், காய்கறிகள் ஏற்றுமதி 2023-24-ம் நிதியாண்டில் 3.66 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 2024-25-ம் நிதியாண்டில் 3.87 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்து 5.67% உயர்ந்துள்ளது.
2025 மார்ச் மாதத்தைப் பொறுத்தவரை மொத்த ஏற்றுமதி 73.61 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது மார்ச் 2024 உடன் ஒப்பிடும்போது 2.65 சதவீத வளர்ச்சியாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2122016
***
TS/PLM/AG/KR
(Release ID: 2122038)
Visitor Counter : 37