நித்தி ஆயோக்
இந்தியாவின் கையால் & சக்தியால் இயக்கப்படும் கருவிகள் தொழில்- 25 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஏற்றுமதி வாய்ப்புகளைப் பயன்படுத்துவது குறித்த நிதி ஆயோக் அறிக்கை
Posted On:
15 APR 2025 6:02PM by PIB Chennai
கையால் பயன்படுத்தப்படும் கருவிகள் மற்றும் சக்தியால் இயக்கப்படும் கருவிகள் தொழில் துறை குறித்த அறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது. 25 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஏற்றுமதிக்கு உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்துதல் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் திறன் குறித்து இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் திரு சுமன் பெரி இந்த அறிக்கையை உறுப்பினர் டாக்டர் வி.கே.சரஸ்வத், உறுப்பினர் டாக்டர் அரவிந்த் விர்மானி, நிதி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரி திரு பி.வி.ஆர்.சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலையில் வெளியிட்டார்.
தற்போது சுமார் 100 பில்லியன் டாலர் மதிப்புள்ள கையால் பயன்படுத்தப்படும் மின்கருவிகளுக்கான உலகளாவிய வர்த்தக சந்தை மேலும் அதிகரித்து 2035-ம் ஆண்டில் 190 பில்லியன் டாலரை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த மின் கருவிகள் ஏற்றுமதியில் சீனா உலகளாவிய ஆதிக்கம் செலுத்துகிறது.
அடுத்த பத்து ஆண்டுகளில் 25 பில்லியன் டாலர் ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு, உலகளாவிய சந்தையில் மிகப் பெரும் பங்களிப்பைக் கைப்பற்றும் வாய்ப்புகளை இந்தியா கொண்டுள்ளதாக நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'உலகளாவிய உற்பத்தி மையமாக' மாற வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கை அடைய கையால் பயன்படுத்தப்படும் மின்கருவிகளுக்கான துறை ஒரு குறிப்பிடத்தக்க பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தயாரிப்போம் என்ற முன்முயற்சியை மேம்படுத்துதல் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துதல் ஆகியவற்றுடன், அடுத்த 10 ஆண்டுகளில் நமது உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தவும், நமது உலகளாவிய பங்களிப்பை 25 பில்லியன் டாலர் வரை விரிவுபடுத்தவும் இந்த துறை உதவும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2121901
***
TS/GK/AG/DL
(Release ID: 2121928)
Visitor Counter : 33