அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தேசிய குவாண்டம் இயக்கத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தொழில் நிறுவனம், இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த குவாண்டம் கணினிகளில் ஒன்றை அறிமுகப்படுத்துகிறது
प्रविष्टि तिथि:
15 APR 2025 3:49PM by PIB Chennai
உலக குவாண்டம் தினத்தை முன்னிட்டு, தேசிய குவாண்டம் இயக்கத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பெங்களூருவை சேர்ந்த கியூபிஐ ஏஐ புத்தொழில் நிறுவனம், இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த குவாண்டம் கணினிகளில் ஒன்றை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
இந்தச் சாதனையின் மூலம், இந்த நிறுவனமானது அறிவியல், மருந்து கண்டுபிடிப்பு, வாகனம், சரக்கு போக்குவரத்து, நிலைத்தன்மை மற்றும் பருவகால நடவடிக்கை ஆகியவற்றில் ஆழமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கான உந்துதலை உருவாக்கியுள்ளது.
இந்தியாவின் குவாண்டம் பயணத்தை விரைவுபடுத்துவதற்கும் குவாண்டம் கணினி தொழில்நுட்பங்களை நடைமுறைக்குரியதாகவும், உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தவும் கியூபிஐ ஏஐ நிறுவனம் உறுதிபூண்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு சுயமாக உருவாக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் தொழில்நுட்பங்கள், 11 காப்புரிமை விண்ணப்பங்களுக்கு வழிவகுத்தன. மேலும் ஆண்டுக்கு சுமார் ரூ. 1 மில்லியன் வருவாயை ஈட்டியுள்ளன. இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியிடமிருந்து கணிசமான மூலதனத்தையும் இந்நிறுவனம் பெற்றுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2121845
***
TS/GK/AG/KR
(रिलीज़ आईडी: 2121872)
आगंतुक पटल : 94