சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
பாதுகாப்பான குடிநீருக்காக இந்திய வங்கி உதவியுடன் ஆர். ஓ.நிலையத்தை துணைவேந்தர் பி. பிரகாஷ் பாபு திறந்து வைத்தார்
प्रविष्टि तिथि:
14 APR 2025 10:58PM by PIB Chennai
புதுவை பல்கலைக்கழகத்தில் உள்ள வெள்ளிவிழா வளாகத்தில் உள்ள மனிதவியல் மற்றும் சமூக அறிவியல் பள்ளிகளில், ஒரு மணி நேரத்திற்கு 250 லிட்டர் திறனுடைய நீர் சுத்திகரிப்பு(ஆர். ஓ.)நிலையத்தைத் துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு திறந்து வைத்தார். சுற்றுப்புறங்களில் உள்ள மாணவர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான குடிநீர் வழங்குவதே இந்த வசதியின் நோக்கமாகும்.

இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம், இந்திய வங்கியின் பெருநிறுவன சமூக பொறுப்புடைமை (CSR) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
***
SV/RJ
(रिलीज़ आईडी: 2121681)
आगंतुक पटल : 48
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English