எரிசக்தி அமைச்சகம்
முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதிநவீன மென்பொருள் மாதிரி மத்திய மின்சார ஆணையத்தால் உருவாக்கப்பட்டுள்ளது - அனைத்து விநியோக நிறுவனங்களுக்கும் இது பயனளிக்கும்
Posted On:
13 APR 2025 3:23PM by PIB Chennai
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த உற்பத்தி, பரிமாற்றம், சேமிப்பு விரிவாக்க திட்டமிடல் மாதிரி தேவைக்கான ஒரு முக்கிய கருவி, 11.04.2025 அன்று மத்திய மின்சார ஆணையத்தின் (CEA) தலைவர் திரு கன்ஷ்யாம் பிரசாத்தால், மாநில மின் பயன்பாடுகளின் பல்வேறு பிரதிநிதிகள் முன்னிலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மென்பொருள் மாதிரியை அனைத்து மாநிலங்கள் / விநியோக நிறுவனங்களுக்கு இலவசமாக விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
உள்நாட்டில் உருவாக்கப்பட்ட இது, ஜூன் 2023-ல் மின்சார அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப ஒரு விரிவான திட்டத்தை செயல்படுத்துவதில் மாநிலங்களுக்கு உதவ வடிவமைக்கப்பட்டுள்ளது.
வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்ட பின்னர், மின்சார ஆணையம் அனைத்து மின் விநியோக நிறுவனங்களுக்குமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் மாறும் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் திருத்தப்பட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், அனைவருக்கும் ஒரு பொதுவான செயல்பாட்டை உருவாக்கி, அதை இலவசமாக அவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஆய்வுகளை எளிதாக ஒருங்கிணைக்கவும், நாட்டிற்கு உகந்த தீர்வுகளை வெளிக்கொணரவும் இது உதவும்.
****
PLM/DL
(Release ID: 2121450)
Visitor Counter : 39