நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரோஸ் வேலி போன்சி மோசடியில் முறையான முதலீட்டாளர்களுக்கு சொத்துக்களை மீட்டுத் தர ரூ.515.31 கோடியை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் திரு பங்கஜ் சவுத்ரி ஒப்படைத்தார்

Posted On: 12 APR 2025 1:20PM by PIB Chennai

ரோஸ் வேலி போன்சி ஊழலில் முறையான முதலீட்டாளர்களுக்கு சொத்துக்களை மீட்டெடுப்பதற்காக அமைக்கப்பட்ட சொத்து விற்பனை குழுவின் தலைவர் நீதிபதி டி.கே.சேத்திடம் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் திரு பங்கஜ் சவுத்ரி ரூ.515.31 கோடிக்கான கோரிக்கை வரைவோலையை இன்று வழங்கினார்.

ராகுல் நவீன், அமலாக்கத் துறை இயக்குநர் மற்றும் அரசின் மூத்த அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

சொத்து தீர்ப்புக் குழுவிடம் இதுவரை பதிவு செய்யப்பட்ட 31 லட்சம் இழப்பீடுகளில், சுமார் 7.5 இலட்சம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப வழங்க இந்தத் தொகை பயன்படுத்தப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, அமலாக்க இயக்குநரகம் (இ.டி) ரூ .22 கோடியை ஏ.டி.சி.யிடம் ஒப்படைத்தது, இது 32,319 சட்டபூர்வமான முதலீட்டாளர்களுக்கு பணத்தை மீட்டெடுக்க பயன்படுத்தப்பட்டது.

 

2015-17 ஆம் ஆண்டில் அமலாக்கத் துறையால் ரூ.515.31 கோடி முடக்கப்பட்டது. இந்த வங்கிக் கணக்குகள் உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி பறிமுதல் செய்யப்பட்டன / முடக்கப்பட்டன.

 

மேற்கு வங்கம், ஒடிசா, அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் ரோஸ் வேலி குழுமத்திற்கு எதிரான ஐந்து  பணமோசடி தடுப்புச் சட்ட  வழக்குகளை அமலாக்க இயக்குநரகம் விசாரித்து வருகிறது. இந்த வழக்குகள் அனைத்திலும் பி.எம்.எல்.ஏ இன் கீழ் சிறப்பு நீதிமன்றங்களில் அமலாக்க இயக்குநரகம் வழக்கு புகார்களை தாக்கல் செய்துள்ளது.

 

மேலும் விரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2121170

****

PKV/DL


(Release ID: 2121271) Visitor Counter : 18


Read this release in: English , Urdu , Hindi