அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சியோலில் நடைபெற்ற புத்தாக்க இயக்கத்தின் வருடாந்திரக் கூட்டம்- 2025 -ல் இந்தியா தனது பயோஇ3 கொள்கையை வெளியிட்டது
Posted On:
12 APR 2025 9:38AM by PIB Chennai
இந்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறை புத்தாக்க இயக்கம் 2.0-ன் ஒரு பகுதியாக நெதர்லாந்துடன் இணைந்து ஒருங்கிணைந்த உயிரி சுத்திகரிப்பு ஆலையை வழிநடத்துகிறது. 2025 ஏப்ரல் 9 முதல் 11 வரை தென் கொரியாவின் சியோலில் நடைபெற்ற தூய்மையான எரிசக்தி கண்டுபிடிப்புகளை விரைவுபடுத்தும் பலதரப்பு தளமான புத்தாக்க இயக்கம் வருடாந்திர ஒன்றுகூடல் -2025, தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பத்தில் உலகத் தலைவர்களை ஒன்றிணைத்தது. முன்னாள் பிரெஞ்சு அதிபர் பிரான்சுவா ஹாலண்டேவுடன் இணைந்து சிஓபி21-ன் போது, பிரதமர் திரு நரேந்திர மோடியால் இந்தச் சொல் உருவாக்கப்பட்டது. புத்தாக்க இயக்க முன்முயற்சியில் இந்தியா தொடர்ந்து தீவிரப் பங்காற்றி வருகிறது.
பயோஇ3 கொள்கை எரிபொருட்கள், ரசாயனங்கள் மற்றும் பொருட்களின் நிலையான மற்றும் குறைந்த கார்பன் உற்பத்தியை எவ்வாறு ஊக்குவிக்கிறது என்பதை பங்கேற்பாளர்கள் எடுத்துரைத்தனர். குறைந்த கார்பன் கொண்ட எதிர்காலத்திற்கான புதுமை உந்துதல் உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பை வளர்க்கும் தொழில்நுட்பங்களை உருவாக்க இந்தக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2121135
****
PKV/DL
(Release ID: 2121180)
Visitor Counter : 30