நித்தி ஆயோக்
மோட்டார் வாகன தொழில்துறை: உலகளாவிய மதிப்புத் தொடரில் இந்தியாவின் பங்கேற்புக்கு ஊக்கமளித்தல் குறித்த அறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது
Posted On:
11 APR 2025 5:14PM by PIB Chennai
மோட்டார் வாகன தொழில்துறை: உலகளாவிய மதிப்புத் தொடரில் இந்தியாவின் பங்கேற்பை ஊக்குவித்தல் குறித்த அறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது. நிதி ஆயோகின் துணைத் தலைவர் திரு சுமன் பெர்ரி இந்த அறிக்கையை வெளியிட்டார். இந்த நிகழ்வுக்கு நிதி ஆயோகின் உறுப்பினர்கள் டாக்டர் வி கே சரஸ்வத், டாக்டர் அர்விந்த் வீரமணி, தலைமை நிர்வாக அதிகாரி திரு பி வி ஆர் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தியாவின் மோட்டார் வாகன தொழில்துறையை விரிவாக ஆய்வு செய்யும் இந்த அறிக்கை வாய்ப்புகளையும், சவால்களையும் எடுத்துரைப்பதோடு உலகளாவிய மோட்டார் வாகன சந்தைகளில் முக்கிய பங்குதாரராக இந்தியாவை நிலைநிறுத்துவதற்கான பாதையையும் சுட்டிக்காட்டியுள்ளது.
உலகளாவிய மோட்டார் வாகன உற்பத்தியில் 4-வது பெரிய நாடாக இந்தியா உள்ள போதும் உலகளாவிய உதிரி பாகங்கள் சந்தையில் அதன் மதிப்பு சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. 2030- வாக்கில் இந்தியாவின் மோட்டார் வாகன தொழில்துறை குறித்த நிதி ஆயோகின் தொலைநோக்குப் பார்வை அடையக்கூடியதாகவே உள்ளது. நாட்டின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி 145 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயரும் என்பது இந்த அறிக்கையின் கண்ணோட்டமாக உள்ளது. மேலும் ஏற்றுமதி 20 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து மும்மடங்கு அதிகரித்து 60 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என்றும் அது கூறியுள்ளது. இந்த வளர்ச்சி சுமார் 25 அமெரிக்க டாலர் வர்த்தக உபரிக்கு வழிவகுக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வளர்ச்சி மூலம் 2 மில்லியன் முதல் 2.5 மில்லியன் வரையிலான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்தத்துறையில் மொத்த நேரடி வேலைவாய்ப்பு எண்ணிக்கை 3 முதல் 4 மில்லியன் வரை இருக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2120977
****
(Release ID: 2120977 )
TS/SMB/AG/RJ/DL
(Release ID: 2121053)
Visitor Counter : 41