புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் பிப்ரவரி மாதத்தில் 2.9% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது

Posted On: 11 APR 2025 4:00PM by PIB Chennai

நாட்டின் தொழில்துறை உற்பத்திக் குறியீட்டு எண் குறித்த மதிப்பீடுகள் மாதந்தோறும் 12-ம் தேதி (அல்லது 12-ம் தேதி விடுமுறை நாளாக இருந்தால் முந்தைய வேலை நாள்) ஆறு வார கால தாமதத்துடன் வெளியிடப்படுகின்றன. மேலும் முக்கிய முகமைகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளுடன் இந்தத் தகவல்கள் தொகுக்கப்படுகின்றன. அவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், நிறுவனங்களிடமிருந்து தரவுகளைப் பெறுகின்றன. தொழில் உற்பத்திக் குறியீட்டின் திருத்தக் கொள்கையின்படி, இந்த விரைவு மதிப்பீடுகள் அடுத்தடுத்த வெளியீடுகளில் திருத்தங்களுக்கு உட்படுத்தப்படும்.

இந்தத் திருத்தத்தின் . முக்கிய சிறப்பம்சங்கள்: 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான தொழில் உற்பத்திக் குறியீட்டெண் வளர்ச்சி வீதம் 2.9 சதவீதமாக உள்ளது. இது கடந்த மாதத்தில் 5.0 சதவீதமாக இருந்தது.

சுரங்கம், உற்பத்தி, மின்சாரம் ஆகிய மூன்று துறைகளின் வளர்ச்சி விகிதங்கள் முறையே 1.6 சதவீதம், 2.9 சதவீதம் மற்றும் 3.6 சதவீதமாகும். இத்துறைகளின் உற்பத்தி குறியீடுகள் முறையே 141.9, 148.6 மற்றும் 194.0 ஆக உள்ளன.

தொழில்துறை சார்ந்த  நிறுவனங்களின் உற்பத்தி விகிதம் (உலோகங்கள்), "எஃகு குழாய்கள், எடை குறைவான எஃகு பார்கள் ஆகியவை குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கொண்டுள்ளன.

மோட்டார் வாகனங்கள், டிரெய்லர்கள் போன்ற வாகனங்களின்  உற்பத்தி மற்றும் உதிரிபாகங்களின் உற்பத்தி, ஆகியவையும் வளர்ச்சி கண்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2120934

--

TS/SV/KPG/RJ


(Release ID: 2120990)
Read this release in: English , Urdu , Hindi , Marathi