ஆயுஷ்
azadi ka amrit mahotsav

உலக ஹோமியோபதி தினம்

Posted On: 09 APR 2025 3:53PM by PIB Chennai

உலக ஹோமியோப்தி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10 அன்று கொண்டாடப்படுகிறது.ஹோமியோபதி மருத்துவ முறை உலகின் இரண்டாவது பெரிய மருத்துவ முறையாகும். உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு குஜராத்தின் காந்திநகரில்  மிகப்பெரிய அளவில் ஹோமியோபதி கருத்தரங்கை இந்தியா நடத்துகிறது.

இந்தியாவில் 3.45 லட்சம் பதிவு செய்யப்பட்ட ஹோமியோபதி மருத்துவர்கள், 277 ஹோமியோபதி மருத்துவமனைகள், 8,593 ஹோமியோபதி மருந்தகங்கள், 277 ஹோமியோபதி கல்வி நிறுவனங்கள் உள்ளன. ஹோமியோபதிக்கான தேசிய ஆணையம் கல்வி, நடைமுறையை ஒழுங்குபடுத்துகிறது,

ஹோமியோபதி என்பது ஒத்திருப்பவை ஒத்திருப்பவற்றைக் குணப்படுத்தும் என்ற கோட்பாட்டின் வழி குணமளிக்கிறது.   இது ஒரு ஆரோக்கியமான நபருக்கு ஒரு நோயின் அறிகுறிகளை ஏற்படுத்தும் ஒரு பொருள் ஒரு நோய்வாய்ப்பட்ட நபருக்கு இதே போன்ற அறிகுறிகளை குணப்படுத்தும் என்று கூறுகிறது. இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக வேர் பரப்பியுள்ள ஹோமியோபதி உலகின் 2-வது பெரிய மருத்துவ முறையாகும்.  இது அதன் பாதுகாப்பான, முழுமையான குணப்படுத்தும் அணுகுமுறைக்காக கோடிக் கணக்கானவர்களால் நம்பப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் 10 அன்று, ஹோமியோபதியின் தந்தை டாக்டர் சாமுவேல் ஹானிமேனின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் உலக ஹோமியோபதி தினத்தை கொண்டாடுவதில் இந்தியாவும் உலகத்துடன் இணைந்து செயல்படுகிறது. இந்தியாவில், இந்த நாள் ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. ஏனெனில் நாட்டில் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த சிகிச்சையை நம்பியுள்ளனர்.

இந்த ஆண்டு, குஜராத்தின் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திர் மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் மிகப்பெரிய ஹோமியோபதி கருத்தரங்குடன் கூடிய கொண்டாட்டம் புதிய உச்சங்களை எட்டவுள்ளது. இந்த நிகழ்வில் நுண்ணறிவு விவாதங்கள், அற்புதமான ஆராய்ச்சி விளக்கங்கள், நாட்டின் மிகப்பெரிய ஹோமியோபதி தொழில்துறை கண்காட்சி ஆகியவை இடம்பெறும்.

ஹோமியோபதி இந்தியாவில் வலுவான சுகாதார நடைமுறையாக உள்ளது. நாடு முழுவதும் 3.45 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட ஹோமியோபதி மருத்துவர்கள் மில்லியன் கணக்கான மக்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.

இந்தியாவில் 277 ஹோமியோபதி மருத்துவமனைகள் உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றன. இந்த மருத்துவமனைகள் அவசர சிகிச்சை தேவையில்லாத ஆனால் கவனம் தேவைப்படும் நோயாளிகளுக்கும் உதவுகின்றன. மேலும், 8,593 ஹோமியோபதி மருந்தகங்கள் அடிப்படை சுகாதார சேவைகளை வழங்கி வருகின்றன. ஆயுஷ் ஆரோக்கிய மருத்துவமனைகளில் 8,697 ஹோமியோபதி படுக்கைகள் இந்தியாவில் உள்ளன.

ஹோமியோபதி கல்வியும் செழித்து வளர்ந்து வருகிறது. நாடு முழுவதும் 277 கல்லூரிகள் உள்ளன. இதில் 197 இளநிலை நிறுவனங்கள், 3 முழுமையான முதுநிலை கல்லூரிகள், 77 ஒருங்கிணைந்த இளநிலை / முதுநிலை கல்லூரிகள் அடங்கும். இவை அனைத்தும் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய ஹோமியோபதி ஆணையத்தின் கீழ் வருகின்றன.

மருந்து துறையைப் பொறுத்தவரை, இந்தியாவில் ஹோமியோபதி மருந்துகளை உற்பத்தி செய்வதில் 384 தொழிற்சாலைகள் ஈடுபட்டுள்ளன. இது நாடு முழுவதும் உயர்தர, தரப்படுத்தப்பட்ட மருந்துகள் கிடைப்பதை இது  உறுதி செய்கிறது.

ஹோமியோபதி மத்திய கவுன்சில் சட்டம், 1973 என்ற சட்டத்துடன்  தொடங்கிய வலுவான கட்டமைப்பின் பின்னணியில் இந்தியாவில் ஹோமியோபதி வளர்ந்துள்ளது. இந்த மைல்கல் சட்டம் நாடு முழுவதும் ஹோமியோபதி கல்வி, தொழில்முறை நடைமுறையை ஒழுங்குபடுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டது.

விரிவான சீர்திருத்தங்களின் அவசியத்தை உணர்ந்து 5 ஜூலை 2021 தேதியிட்ட அறிவிப்பின் மூலம் ஹோமியோபதிக்கான தேசிய ஆணையம் நிறுவப்பட்டது. 1973-ம் ஆண்டு சட்டத்திற்கு பதிலாக ஹோமியோபதிக்கான தேசிய ஆணையச் சட்டம்- 2020 நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.

ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக, ஹோமியோபதி ஆணையம், இப்போது வெளிப்படையான முறையில் ஒழுங்குபடுத்தும் பொறுப்பைக் கைக்கொண்டு செயல்படுகிறது.

ஹோமியோபதி மருத்துவர்கள், நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஆராய்ச்சி மையங்களின் பெரிய கட்டமைப்புடன், ஹோமியோபதியை உலகளவில் ஊக்குவிப்பதிலும், அதில் முன்னேறுவதிலும் இந்தியா தீவிரமாக உள்ளது. உலக ஹோமியோபதி தினம் போன்ற கொண்டாட்டங்கள் ஹோமியோபதியை நவீனமயமாக்குவதையும் வலுப்படுத்துவதையும் ஊக்குவித்து வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2120393

***

TS/PLM/AG/KR


(Release ID: 2120484) Visitor Counter : 47


Read this release in: English , Urdu , Hindi , Gujarati