ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மை கங்கைக்கான தேசிய இயக்கத்தின் 61-வது நிர்வாகக் குழு கூட்டத்தில் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல்

Posted On: 09 APR 2025 3:39PM by PIB Chennai

மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் ஒரு தீர்க்கமான நடவடிக்கையாக, தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கமானது (NMCG) மற்றொரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. தேசிய தூய்மை கங்கை இயக்கத்தின் (NMCG) 61-வது நிர்வாகக்குழுக் கூட்டம், அதன் தலைமை இயக்குநர் திரு ராஜீவ்குமார் மிட்டல் தலைமையில் நடைபெற்றது.  இதில், கங்கை நதியின் பாதுகாப்பு, புத்துயிரூட்டல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட பல்வேறு பெரிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த முயற்சிகள் கங்கை நதியின் தூய்மையை மேம்படுத்துதல், நிலையான வளர்ச்சியை ஊக்குவித்தல், கங்கையின் சுற்றுச்சூழல் பாரம்பரியத்தையும், கலாச்சார பாரம்பரியத்தையும் பாதுகாத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டவையாகும்.

செயற்குழு கலந்தாலோசித்து 900 கோடி ரூபாய்க்கும் அதிகமான பாதாள சாக்கடை திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. உத்திரப் பிரதேசத்தில் உள்ள மொராதாபாத் நகரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பாகவும் இதர தொடர்புடைய பணிகள் தொடர்பாகவும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. ராம்கங்கா நதியில் மாசுபாட்டைத் தடுப்பதற்காக புதிய திட்டம் அங்கீகரிக்கப்பட்டது. ₹409.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தத் திட்டம், செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், மண்டலம்-3-ல் 15 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களும், மண்டலம்-4-ல் 65 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களும் கட்டப்படும்.

பீகாரில் உள்ள அர்ரா நகரில் மற்றொரு குறிப்பிடத்தக்க செயல்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ₹328.29 கோடி மதிப்பீட்டில் ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ், 47 எம்எல்டி திறன் கொண்ட அதிநவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்படும். மேலும் 19.5 கிலோ மீட்டர் நீளமுள்ள கழிவுநீர் கட்டமைப்பு நிறுவப்படும்.

கூட்டத்தில், உத்தரபிரதேசத்தின் கான்பூர் நகரத்தில், 14 வடிகால்கள் தொடர்பான திட்டத்தை ₹138.11 கோடி மதிப்பீட்டில்  செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், வடிகால்களிலிருந்து நேரடியாக ஆற்றில் கலக்கும் கழிவுநீரைத் தடுத்து நிறுத்தி, சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படும்.

கங்கை படுகையில் பல நூற்றாண்டுகளாக செழித்து வளர்ந்து வரும் பாரம்பரிய மரப் படகு தயாரிக்கும் கைவினைத் தொழில்களை ஆய்வு செய்து ஆவணப்படுத்தவும் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்தது.

இந்த முன்முயற்சிகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட பிறகு, கங்கை நதியையும் அதன் துணை நதிகளையும் தூய்மைப்படுத்தி புத்துயிரூட்டுவதற்கான முயற்சிகள் புதிய வேகத்தைப் பெறும். இந்தத் திட்டங்கள் மாசுக் கட்டுப்பாடு, நீர் சேமிப்பு ஆகியவற்றுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், நதிகளின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும், நீடித்த நீர் மேலாண்மை அமைப்புகளை உருவாக்குவதிலும் மைல்கற்களாக அமையும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2120378

***

TS/PLM/AG/RR


(Release ID: 2120459) Visitor Counter : 30
Read this release in: English , Urdu , Hindi