சுரங்கங்கள் அமைச்சகம்
கனிமங்கள் துரப்பணப் பணி உரிமம் மற்றும் முதல் தொகுப்பு ஏலம் ஆகியவை குறித்த தேசிய பயிலரங்கு- சுரங்க அமைச்சகம் நடத்தியது
Posted On:
08 APR 2025 4:02PM by PIB Chennai
சுரங்க அமைச்சகம் சார்பில் வழங்கப்படும் கனிமங்கள் துரப்பண உரிமம், அடுத்து நடைபெறவிருக்கும் முதல் தொகுப்பு ஏலம் ஆகியவை குறித்த தேசிய பயிலரங்கிற்கும் விளக்கக் கூட்டத்திற்கும் சுரங்க அமைச்சகம் தில்லியில் இன்று (08.04.2025) ஏற்பாடு செய்திருந்தது. சுரங்கங்கள், கனிமங்கள் (மேம்பாடு-ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம்- 2023-ன் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கை, தொழில்நுட்ப அம்சங்கள், நடைமுறைகள் ஆகியவை குறித்த ஆழமான தகவல்களைப் பகிர்வதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், இந்தப் பயிலரங்கு ஒரு முக்கிய தளமாகச் செயல்பட்டது.
இதில் உரையாற்றிய சுரங்க அமைச்சகத்தின் செயலாளர் திரு வி.எல்.காந்தா ராவ், இந்தியாவின் முக்கியமான கனிம வளங்களை வெளிக்கொணர்வதற்கு, உரிமம் வழங்கும் நடைமுறையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
பங்கேற்பாளர்களுக்கு ஏலம் தொடர்பான காலக்கெடு குறித்தும் விளக்கப்பட்டது. ஏலத்திற்கு முந்தைய விளக்க கூட்டம் 2025 ஏப்ரல் 22 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏலத்துக்கான ஆவணங்களை 2025 மே 26-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தப் பயிலரங்கில் மத்திய, மாநில அரசு அதிகாரிகளும், பொதுத்துறை நிறுவனங்கள், தொழில்துறை சங்கங்கள், துரப்பண நிறுவனங்கள் ஆகியவற்றின் அதிகாரிகளும் முதலீட்டாளர்களும் கலந்து கொண்டனர்.
***
(Release ID: 2120042)
TS/PLM/AG/KR
(Release ID: 2120107)
Visitor Counter : 32