புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
புள்ளியியல் அமைப்புகளை வலுப்படுத்துவது குறித்து மாநில அமைச்சர்கள் மாநாட்டை மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் நடத்தியது
Posted On:
05 APR 2025 6:48PM by PIB Chennai
புள்ளியியல் - திட்ட அமலாக்க அமைச்சகம் புள்ளியியல் அமைப்புகளை வலுப்படுத்துவது குறித்த மாநில அமைச்சர்கள் பங்கேற்ற மாநாடு இன்று (05 ஏப்ரல் 2025) புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்றது.
மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க இணையமைச்சர் திரு ராவ் இந்தர்ஜித் சிங் மாநாட்டிற்குத் தலைமை வகித்தால். அவர் தமது தொடக்க உரையில், மாநாட்டில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் பங்கேற்பைப் பாராட்டினார். பயனுள்ள கொள்கைகளை வடிவமைப்பதில் நம்பகமான தரவுகளின் இன்றியமையாத பங்கை அவர் சுட்டிக் காட்டினார். வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை அடைவதற்கான தொடர்ச்சியான பயணத்தில், புதுமைகளைத் தழுவுதல், ஒருங்கிணைப்பை வளர்த்தல், புள்ளிவிவர செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மையை நிலைநிறுத்துதல் ஆகியவற்றில் ஒருங்கிணைந்த முயற்சிகள் அவசியம் என்று அவர் கூறினார். புள்ளியியல் முறையை வலுப்படுத்த அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் ஒத்துழைப்புக்கு தேவை என அவர் குறிப்பிட்டார்.
ஆதாரங்கள் அடிப்படையிலான கொள்கை உருவாக்கத்திற்கு வலுவான புள்ளியியல் முறையின் முக்கியத்துவத்தை மத்திய புள்ளியியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் சௌரப் கார்க் வலியுறுத்தினார். புள்ளியியலை வலுப்படுத்துவதற்கான ஆதரவுத் திட்டம் உட்பட இந்த அமைச்சகத்தின் முக்கிய முன்முயற்சிகளை அவர், எடுத்துரைத்தார்.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள், மாநிலங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.
***
(Release ID: 2119300)
PLM/ RJ
(Release ID: 2119330)
Visitor Counter : 25