பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கம்பெனிகள் சட்டம் 2013-ன் கீழ் விரைவு இணைப்புகளை ஏற்படுத்துவதற்கான விதிகளில் உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து பொதுமக்களின் கருத்துக்களை பெருவணிக நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் வரவேற்கிறது

Posted On: 05 APR 2025 4:10PM by PIB Chennai

நிறுவனங்கள் சட்டம் 2013 இன் பிரிவு 233 மத்திய அரசின் ஒப்புதல் மூலம் சில நிறுவனங்களின் இணைப்பு அல்லது ஒருங்கிணைப்பை (விரைவான இணைப்பு) வழங்குகிறது. பட்ஜெட் உரையின் (2025-2026) பத்தி 101-ன் படி, அத்தகைய இணைப்புகளின் நோக்கத்தை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக, நிறுவனங்கள் (சமரசங்கள், ஏற்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்புகள்) விதிகள், 2016-ல் திருத்தம் செய்ய முன்மொழியும் வரைவு அறிவிக்கை (விளக்கக் குறிப்புடன்) பெருவணிக நிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் (www.mca.gov.in) இணையதளத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பெருவணிக நிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் இணையதளத்தில் உள்ள மின்னணு ஆலோசனை தொகுப்பு மூலம் வரைவு திருத்த விதிகள் குறித்த கருத்துகள் / ஆலோசனைகளை 2025 மே 5 -ம் தேதிக்குள் அனுப்பலாம்.

***

(Release ID: 2119247)

PKV/RJ


(Release ID: 2119271) Visitor Counter : 19


Read this release in: English , Urdu , Hindi