ஆயுஷ்
உலக அளவில் பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளைப் பிரபலப்படுத்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் ஆயுஷ் இருக்கை
Posted On:
04 APR 2025 4:45PM by PIB Chennai
ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகிய மருத்துவ முறைகளைக் கொண்ட ஆயுஷ் இருக்கைத் திட்டம் என்பது மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் முன்முயற்சியாகும். இது உலக அளவில் பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளான ஆயுஷ் மருத்துவ முறைகளை மேம்படுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் பிரபலப்படுத்துவதற்கும் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், ஆயுஷ் அமைப்புகளிடையே கல்வியில் ஒத்துழைப்பு, ஆராய்ச்சியில் கூட்டு செயல்பாடு ஆகியவற்றை எளிதாக்குவதற்காக வெளிநாட்டு பல்கலைக்கழகங்களிலும் நிறுவனங்களிலும் ஆயுஷ் இருக்கைகள் நிறுவப்பட்டுள்ளன. ஆயுஷ் அமைச்சகம் பங்களாதேஷ், ஆஸ்திரேலியா, மொரீஷியஸ், லாட்வியா, மலேசியா ஆகிய நாடுகளில் உள்ள நிறுவனங்களில் ஆயுஷ் கல்வி இருக்கைகளை நிறுவியுள்ளது.
இந்த இருக்கைகள் சர்வதேச அளவில் ஆயுஷ் மருத்துவ முறைகளை மேம்படுத்துவதற்கான பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இந்த முயற்சியின் மூலம் மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட பணிகள் சில பின்வருமாறு:
*ஆயுஷ் மருத்துவ முறைகள் தொடர்பான கல்வி, ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளுதல்.
* தேவைக்கேற்ப ஆயுஷ் கல்வியின் குறுகிய கால / நடுத்தர கால படிப்புகளுக்கான பாடத்திட்டத்தை வடிவமைத்து இறுதி செய்தல்.
* பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத் தேவைகளுக்கு ஏற்ப பயிற்சிகள் / விரிவுரைகள் / செயல்முறை அமர்வுகளை ஏற்பாடு செய்தல்.
* கூட்டு ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்தல்.
* பிற நாடுகளுக்கு ஆயுஷ் மருத்துவ முறைகள் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் நம்பகமான ஆதாரமாக செயல்படுதல்.
* ஆயுஷ் மருத்துவ முறைகள் குறித்த பயிலரங்குகள் / கருத்தரங்குகளை நடத்துதல்
மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம், ஆயுஷ் துறையில் ஆராய்ச்சி, கல்விப் பரிமாற்றம் ஆகியவற்றை எளிதாக்குவதற்காக வெளிநாட்டு நிறுவனங்களுடன் 50 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய ஆயுஷ் இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு பிரதாப்ராவ் ஜாதவ் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
Release ID: 2118854
TS/PLM/KPG/DL
(Release ID: 2119014)
Visitor Counter : 24