சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
நாடு தழுவிய “வாடிக்கையாளர் சேவை மாதம்” என்ற முன்முயற்சியில் பிஎஸ்என்எல் இணைந்துள்ளது
Posted On:
04 APR 2025 12:59PM by PIB Chennai
வாடிக்கையாளர்களின் அனுபவத்தை அறிந்து பணிகளை விரிவுபடுத்துவதற்காக நாடு தழுவிய “வாடிக்கையாளர் சேவை மாதம்” 2025 ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 30 வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த முன்முயற்சியை பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனம் (பிஎஸ்என்எல்) தொடங்கியுள்ளது.
சேவை தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது, நெட்வொர்க் தரத்தை மேம்படுத்துவது, வாடிக்கையாளர் ஈடுபாட்டை வலுப்படுத்துவது ஆகியவை இந்த சிறப்பு இயக்கத்தின் நோக்கமாகும்.
வாடிக்கையாளர் சேவை மையங்களில் குறைதீர்ப்பு முகாம்களை நடத்துவது, நீண்டகால நிலுவைப் புகார்களுக்கு தீர்வு காண சிறப்பு கள இயக்கங்களை மேற்கொள்வது, சேவைகளை கண்காணிப்பது டிஜிட்டல் தொடர்பாக மக்களிடையே பிரச்சாரம் செய்வது போன்றவை இந்த வாடிக்கையாளர் சேவை மாதத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கும்.
அனைத்து வாடிக்கையாளர்களும் இந்த முகாம்களில் பங்கேற்று இவற்றை வெற்றியடையச் செய்யுமாறு பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி கேட்டுகொண்டுள்ளது. வாடிக்கையாளர் சேவை குறித்த பின்னூட்டங்கள், ஆலோசனைகள், பிரச்சனைகள் அல்லது சேவை வேண்டுகோள்கள் ஆகியவற்றை https://cfp.bsnl.co.in/ என்ற இணைய தளத்தின் மூலம் தெரிவிக்குமாறு வாடிக்கையாளர்கள் கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர்.
***
AD/SMB/SG
(Release ID: 2118666)
Visitor Counter : 19