விண்வெளித்துறை
azadi ka amrit mahotsav

ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம் அமைத்தல்

Posted On: 03 APR 2025 5:13PM by PIB Chennai

ஸ்ரீ ஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம்  நிறுவப்படும். இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது  ரூ.3984.86 கோடி செலவில் அமைக்கப்படும். இந்தத் தளத்தை நிறுவும் பணி 4 ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரோவின் அடுத்த தலைமுறை ஏவுகணை வாகனம் உருவாக்கும் பணி தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது. இது 90 மீட்டர் உயரமும், அதிகபட்சமாக 1000 டன் எடையும் கொண்டது. ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருக்கும் ஏவுதளங்கள் இந்த வகை வாகனங்களை விண்ணில் செலுத்த முடியாது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய விண்வெளித்துறை இணையமைச்சர்  டாக்டர் ஜிதேந்திர சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.

----

(Release ID 2118304)

TS/PLM/KPG/DL


(Release ID: 2118433) Visitor Counter : 36
Read this release in: English , Urdu , Hindi