சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2022-23, 2023-24 மற்றும் 2024-25 (டிசம்பர் 2024 வரை) ஆண்டுகளில் 12,49,496 மற்றும் 1,26,966 சட்ட விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மாநில, மாவட்ட மற்றும் வட்ட சட்ட சேவைகள் ஆணைய அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டன

Posted On: 03 APR 2025 4:05PM by PIB Chennai

சட்ட சேவைகள் ஆணையங்கள் சட்டம், 1987-ன் கீழ் பயனாளிகள் உட்பட சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு இலவச மற்றும் பொருத்தமான சட்ட சேவைகளை வழங்குவதற்காக தேசிய சட்டப் பணிகள் ஆணையம் அமைக்கப்பட்டது. பொருளாதார அல்லது மற்ற இயலாமைகள் காரணமாக எந்தவொரு குடிமகனுக்கும் நீதி கிடைப்பதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படக் கூடாது என்பதை இச்சட்டம் உறுதி செய்கிறது. மேலும், வழக்குகளை சுமுகமாகத் தீர்த்து வைக்க மக்கள் நீதிமன்றங்களையும் இந்த ஆணையம் ஏற்பாடு செய்கிறது. மேலும், மாநிலம், மாவட்டம் மற்றும் வட்டம் என்ற அளவில் பல்வேறு நிலைகளில் சட்டப்பணிகள் ஆணைக்குழுக்கள் செயல்படுகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் 2022-23 முதல் 2024-25 வரை (டிசம்பர் 2024 வரை) 39.44 இலட்சம் நபர்களுக்கு இலவச சட்ட சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.

250 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில், "இந்தியாவில் முழுமையான நீதிக்கான அணுகலுக்கான புதுமையான தீர்வுகளை வடிவமைத்தல்" (திஷா)என்ற மத்திய அரசின் திட்டத்தையும் அரசு ஐந்தாண்டு காலத்திற்கு (2021-2026) செயல்படுத்தி வருகிறது. திஷா திட்டத்தின் கீழ், தொலைபேசி வழி சட்ட ஆலோசனைக்காக குடிமக்களை வழக்கறிஞர்களுடன் மொபைல் செயலி "டெலி-லா" மற்றும் கட்டணமில்லா எண் மூலம் இணைக்கிறது. நியாய பந்து என்ற பொதுநல சேவையானது பதிவு செய்த பயனாளிகளுக்கு நீதிமன்றங்களில் இலவச சட்ட வழக்காடுதலுக்கு உதவுகிறது.

2022-23, 2023-24 மற்றும் 2024-25 (டிசம்பர் 2024 வரை) ஆண்டுகளில் சட்டப்பணிகள் அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட 12,49,496 மற்றும் 1,26,966 சட்ட விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் முறையே சுமார் 13.93 கோடி பேர் மற்றும் 3.06 கோடி பேர் கலந்து கொண்டனர்.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில்  சட்டம் மற்றும் நீதி இணையமைச்சர் (தனிப்பொறுப்பு)  மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள்  இணையமைச்சர் திரு. அர்ஜுன் ராம் மேக்வால் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

(Release ID: 2118245)
TS/IR/RR/DL


(Release ID: 2118403) Visitor Counter : 17
Read this release in: English , Urdu , Hindi