தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சைபர் குற்றங்கள், நிதி மோசடிகளுக்கு தொலைத்தொடர்பு கருவிகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க தொலைத்தொடர்புத் துறையின் முயற்சிகள்

प्रविष्टि तिथि: 03 APR 2025 2:55PM by PIB Chennai

சைபர் குற்றங்கள், நிதி மோசடிகளுக்கு தொலைத்தொடர்பு கருவிகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க தொலைத்தொடர்புத் துறை  பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது:

சந்தேகத்திற்குரிய மோசடி தகவல்தொடர்புகளைப் புகாரளிப்பது உட்பட பல்வேறு வசதிகளுடன் குடிமக்களை மையமாகக் கொண்ட சஞ்சார் சாத்தி தளமும் மொபைல் செயலியும் உருவாக்கப்பட்டுள்ளன.

தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்காக இணையதளம் மூலமான பாதுகாப்பான டிஜிட்டல் நுண்ணறிவு தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மோசடி அழைப்புகளைக் கண்டறிந்து தடுப்பதற்காக தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுடன் இணைந்து ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.

போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து பெறப்பட்ட சந்தேகத்திற்கிடமான மொபைல் இணைப்புகளை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கருவி உருவாக்கப்பட்டுள்ளது.  மறு சரிபார்ப்புக்குப் பிறகு இதுபோன்ற 78 லட்சம் மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய தொலைத் தொடர்புத்துறை இணையமைச்சர் டாக்டர் பெம்மாசானி சந்திர சேகர் இதனைத் தெரிவித்துள்ளார்.

----

(Release ID 2118197)
TS/PLM/KPG/SG


(रिलीज़ आईडी: 2118324) आगंतुक पटल : 41
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी