நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
இந்திய தர நிர்ணய அமைவனமானது நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் தரநிலைகள் குறித்த வருடாந்தர மாநாட்டை நடத்தியது
Posted On:
03 APR 2025 1:45PM by PIB Chennai
கோவாவில் சூழலியலை மையமாகக் கொண்ட நிறுவனங்களின் தலைவர்கள், துறைத் தலைவர்கள் ஆகியோருக்கான வருடாந்தர மாநாட்டை இந்திய தர நிர்ணய அமைவனம் நடத்தியது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டின் போது, 32 நிறுவனங்களைச் சேர்ந்த 45 பிரதிநிதிகள், மூத்த பிஐஎஸ் அதிகாரிகளுடன் இணைந்து, தரநிலைகள் மூலம் நிலைத்தன்மை என்ற கருப்பொருளில் ஆலோசனைகளை மேற்கொண்டனர்.
தரநிர்ணய அமைவனத்தின் தெற்கு மண்டல துணைத் தலைமை இயக்குநர் திரு பிரவீன் கன்னா, தமது வரவேற்புரையில், தேசிய, சர்வதேச தரங்களை உறுதி செய்வதில் கல்வி நிறுவனங்களின் முக்கிய பங்கைச் சுட்டிக் காட்டினார்.
தர நிர்ணய அமைவனத்தின் தரப்படுத்தல் பிரிவு 2-ன் கூடுதல் துணைத் தலைமை இயக்குநர் திரு சஞ்சய் பந்த் பேசுகையில், நிலைத்தன்மை சவால்களை எதிர்கொள்வதில் தரப்படுத்தலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். தரப்படுத்தல் என்பது நிலைத்தன்மையின் அடித்தளமாக விளங்குகிறது என்று அவர் மேலும் கூறினார். கல்வியாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், சூழல்சார் சவால்களை எதிர்கொள்ளவும் எதிர்கால சந்ததியினருக்கு நீடித்த தாக்கத்தை உருவாக்கும் ஆராய்ச்சி சார்ந்த தரநிலைகளை உருவாக்கவும் முடியும் என்று திரு சஞ்சய் பந்த் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2118173
----
TS/PLM/KPG/SG
(Release ID: 2118233)
Visitor Counter : 28