புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
புள்ளியியல் பயிற்சித் தேவைகள் குறித்த மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை
Posted On:
02 APR 2025 2:30PM by PIB Chennai
புள்ளியியல் பயிற்சித் தேவைகள் குறித்த மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை தற்போதுள்ள பயிற்சி சூழல் அமைப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான உத்திசார் திட்டமிடலை முறையாக மதிப்பீடு செய்கிறது. இந்த அறிக்கை தற்போதுள்ள சாதகங்களை மட்டுமல்லாமல் குறிப்பாக வளர்ந்து வரும் பிரிவுகளில் உள்ள முக்கியமான திறன் இடைவெளிகளையும் எடுத்துக்காட்டுகிறது. இது தேவையான திறன்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. கற்றல் முறைகள் மற்றும் கலாச்சார சூழல்களையும் ஆராய்கிறது. கண்டுபிடிப்புகள், திறன் இடைவெளிகளைக் குறைத்தல், தேசிய முன்னுரிமைகளுடன் கற்றல் தலையீடுகளை சீரமைத்தல் ஆகியவற்றுக்கும் உதவுகின்றன.
தேசிய புள்ளியியல் அமைப்புகள் பயிற்சி நிறுவனமானது செயற்கை நுண்ணறிவு, பேரளவு தரவு பகுப்பாய்வு மற்றும் இயந்திர கற்றல் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய அதிகாரப்பூர்வ புள்ளியியல் மற்றும் தொடர்புடைய துறைகளில் பயிற்சித் திட்டங்களை செயல்படுத்துகிறது. மேம்பட்ட தொழில்நுட்பங்கள் உட்பட திறன்களை மேம்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த அரசு ஆன்லைன் பயிற்சிக்கான கர்மயோகி தளத்தையும் இந்த நிறுவனம் பயன்படுத்துகிறது.
அதிகாரபூர்வப் புள்ளியியல் மற்றும் தொடர்புடைய துறைகளில் அறிவு மற்றும் உலகளாவிய சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான உரைகள், வெபினார்கள், கருத்தரங்குகள், பயிலரங்குகள் மற்றும் பயிற்சித் திட்டங்களையும் தேசிய புள்ளியியல் அமைப்புகள் பயிற்சி நிறுவனம் ஏற்பாடு செய்கிறது.
இந்தத் தகவலை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம்(தனிப் பொறுப்பு)மற்றும் கலாச்சாரத்துறை இணையமைச்சர் திரு ராவ் இந்தர்ஜித் சிங் தெரிவித்தார்.
***
(Release ID: 2117714)
TS/PKV/RR/SG
(Release ID: 2117891)