ஜவுளித்துறை அமைச்சகம்
நாடாளுமன்றக் கேள்வி: பட்டுப்புழு வளர்ப்புக்கான உள்கட்டமைப்பு திட்டங்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
02 APR 2025 1:04PM by PIB Chennai
நாட்டில் பட்டுத் தொழிலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பட்டு ஒருங்கிணைப்புத் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. மாநிலங்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துருக்களின் அடிப்படையில், பட்டுப்புழு விதை உற்பத்தி அலகுகள், வளர்ப்பு நிலையங்கள், இளம்புழு வளர்ப்பு மையங்கள், பட்டு நூற்பு மற்றும் நெசவு அலகுகள், பொது வசதி மையங்கள், மாநில வாரியாக திறன்மிகு மையங்கள் அமைத்தல் உள்ளிட்ட பயனாளிகள் சார்ந்த கூறுகள் மூலம் தேவையான உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு மத்திய அரசின் நிதியுதவி அளிக்கிறது.
தற்போது, புதிய பட்டு வளர்ச்சித் திட்டங்களுக்கான ஒப்புதல் நிலுவையில் இல்லை. பட்டு ஒருங்கிணைப்பு மற்றும் பட்டு ஒருங்கிணைப்பு-2 திட்டத்தின் கீழ் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான நிதியுதவி, வரையறுக்கப்பட்ட பங்கீட்டு முறையுடன் செயல்படுத்துவதற்காக மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட விவசாயிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் பட்டு ஒருங்கிணைப்பு-2 திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படுகிறது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஜவுளித்துறை இணையமைச்சர் திரு. பபித்ரா மார்கெரிட்டா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2117662)
TS/PKV/RR/SG
(வெளியீட்டு அடையாள எண்: 2117725)
வருகையாளர் எண்ணிக்கை : 42