சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
நாடாளுமன்றக் கேள்வி: பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டு திட்டம்(பிஎம் ஏஜேஏஒய்)
प्रविष्टि तिथि:
01 APR 2025 3:54PM by PIB Chennai
பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மாநில மற்றும் மாவட்ட அளவில் சமூக-பொருளாதார மேம்பாட்டு செயல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
ஷெட்யூல்டு வகுப்பினர் அதிகம் வசிக்கும் கிராமங்களில் போதுமான உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை உறுதி செய்வதன் மூலம் சமூக-பொருளாதார வளர்ச்சி மேம்படுத்தப்படுகிறது.
திறன் மேம்பாடு, வருமானம் ஈட்டும் திட்டங்கள் மற்றும் பிற முயற்சிகள் மூலம் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கி ஷெட்யூல்டு வகுப்பினரின் வறுமையைக் குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கல்வியறிவை அதிகரிக்கவும், பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் ஷெட்யூல்டு வகுப்பு மாணவர்கள் சேர்க்கையை ஊக்குவிக்கவும், போதுமான விடுதி வசதிகள் வழங்கப்படுகிறது.
இதுவரை, இந்த திட்டத்தின் கீழ் 891 மாணவர் விடுதிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2024-25-ம் ஆண்டில் 27 விடுதிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. 2024-25 ஆம் ஆண்டில், இந்த திட்டத்தின் கீழ் நிர்வாகச் செலவுகளுக்கு ரூ. 6.64 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை இணையமைச்சர் திரு ராம்தாஸ் அதாவாலே இன்று மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
***
TS/GK/AG/SG/DL
(रिलीज़ आईडी: 2117447)
आगंतुक पटल : 52