மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
மீன்வளத்துறையில் தொழில் முனைவு
Posted On:
01 APR 2025 3:32PM by PIB Chennai
மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத் துறை, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 2025 மார்ச் 8-ம் தேதி மீன்வளத் துறையில் புதுமை மற்றும் தொழில்முனைவை ஊக்குவிப்பதற்காக மீன்வளத் தொடக்க மாநாட்டை நடத்தியது. இந்த மாநாட்டில், மீன்வளத் துறையில் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கும், முதலீட்டுக்கான நிதியுதவிக்கும் புதுமை, நிலைத்தன்மை செயல்திறனை ஊக்குவிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. 'மீன்வள புத்தொழில் மாநாட்டில் 50-க்கும் மேற்பட்ட மீன்வள புத்தொழில் நிறுவனங்கள் பங்கேற்றன. மீன்வளர்ப்பு, மீன்வள தொழில்நுட்பம் மற்றும் மதிப்பு கூட்டுதல் போன்ற பகுதிகளில் புதிய கண்டுபிடிப்புகள் குறித்தும் இதில் எடுத்துரைக்கப்பட்டது. புத்தாக்கம் மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவிப்பதற்கான சாத்தியக் கூறுகளை அடையாளம் காணவும் புத்தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் சரிபார்ப்பு தொடர்பான சவால்கள் மற்றும் வாய்ப்புகள், நிதி அணுகல், சந்தை இணைப்புகள், தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது மற்றும் நிலைத்தன்மை ஆகியவை இம்மாநாட்டின் முக்கிய முடிவுகளில் அடங்கும்.
இந்த மாநாட்டில் நடைபெற்ற போட்டி ஒவ்வொன்றுக்கும் இரண்டு தொடக்க வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதன் மூலம் மொத்தம் 10 வெற்றியாளர்கள் தெர்ந்தெடுக்கப்பட்டு அவரக்ளது புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.10.00 லட்சமும், ரொக்கப் பரிசாக ரூ.1 கோடியும் வழங்கப்படும். இதில் வெற்றி பெறும் புத்தொழில் நிறுவனங்கள், இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம், தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் மற்றும் மத்திய அரசின் மீன்வளத்துறை இணைந்த ஆகியவற்றின் மூலம் வழங்கப்படும் வழிகாட்டுதல்களைப் பெறுவார்கள்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் திரு. ஜார்ஜ் குரியன் இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2117253
***
TS/SV/KPG/SG
(Release ID: 2117325)
Visitor Counter : 18