கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சஹாகர் பிரக்யா

Posted On: 01 APR 2025 1:45PM by PIB Chennai

கூட்டுறவு அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு சட்டப்பூர்வ நிறுவனமான தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம், லக்ஷ்மண்ராவ் இனாம்தார் தேசிய கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அகாடமி மூலம் சஹாகர் பிரக்யா திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 2024-25 இல் பிப்ரவரி மாதம் வரை    கூட்டுறவு நிறுவனங்களின் 1,34,261  பங்கேற்பாளர்கள் பயனடைந்துள்ளனர்.

2018-19 முதல் 28.2.25 வரை மொத்தமாக 1,95,567 பங்கேற்பாளர்கள் பலன் பெற்றுள்ளனர்.

இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தெலங்கானா மாநிலம் ஐதராபாதில் ஒரு மண்டலப் பயிற்சி மையம் அமைந்துள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடாவில், புதிய பயிற்சி மையத்தை, புதிய தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் திறந்துள்ளது.

இந்த தகவலை மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

***

(Release ID: 2117196)

TS/GK/AG/SG


(Release ID: 2117263) Visitor Counter : 20


Read this release in: English , Urdu , Hindi , Bengali