பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சேவைகள் வழங்கலில் ஜனநாயகமயமாக்கல்: டாக்டர் ஜிதேந்திர சிங் ஐ.ஐ.பி.ஏ-வின் 71 வது நிறுவன தினத்தில் ஆளுமை மைல்கற்களை எடுத்துரைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 29 MAR 2025 7:13PM by PIB Chennai

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் இணையமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளி மற்றும் பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சருமான  டாக்டர் ஜிதேந்திர சிங், இந்திய பொது நிர்வாகக் கழகத்தின் 71-வது நிறுவன தினத்தில் டாக்டர் ராஜேந்திர பிரசாத் வருடாந்திர நினைவுச் சொற்பொழிவில் சிறப்புரையாற்றினார்.  பிரதமர் திரு நரேந்திர மோடி பதவியேற்ற கடந்த பத்து ஆண்டுகளில் சேவைகள் வழங்குவதில் ஜனநாயகமயமாக்கப்பட்டுள்ளதை எடுத்துரைத்தார்.

அந்தியோதயாவின் உண்மையான உணர்தலை உள்ளடக்கிய வகையில், வரிசையில் உள்ள கடைசி குடிமகனுக்கும் பலன் சென்றடைவதை உறுதி செய்வதற்கான அரசின் உறுதிப்பாட்டை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

குடிமக்களை மையமாகக் கொண்ட பல்வேறு சீர்திருத்தங்கள் மூலம் குடிமக்களுக்கு நெருக்கமாக நிர்வாகத்தை கொண்டு வருவதில் தனது அமைச்சகத்தின் பொறுப்பை அவர் எடுத்துரைத்தார். விண்வெளி மற்றும் அணுசக்தி போன்ற துறைகளை தனியார் பங்களிப்புடன் ஒருங்கிணைத்து, கூட்டு ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ளும் அரசின் ஒட்டுமொத்த அரசு மற்றும் முழு அறிவியல் அணுகுமுறை குறித்தும் டாக்டர் ஜிதேந்திர சிங் பேசினார்.

கொண்டாட்டங்களைத் தொடர்ந்து, ஐ.ஐ.பி.ஏ.வின் தலைவர் என்ற முறையில், டாக்டர் சிங் 326 வது நிர்வாகக் குழு கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். 2047-இல் வளர்ந்த பாரதம் தொலைநோக்குப் பார்வைக்கு பங்களிக்கும் வகையில், அரசுத் துறைகளுக்கு அப்பால் தனது அறிவுக் களஞ்சியம் மற்றும் தலைமைத்துவ பயிற்சித் தொகுதிகளை விரிவுபடுத்துமாறு ஐ.ஐ.பி.ஏவுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

டாக்டர் சிங் முன்னிலையில் ஐ.ஐ.பி.ஏ மற்றும் பேரிடர் தடுப்பு உள்கட்டமைப்புக்கான கூட்டணி (சி.டி.ஆர்.ஐ) இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது. மேலும், "அந்த்யோதயா சே சர்வோதயா: எ ஃப்ரேம்வொர்க் ஆஃப் யுனிவர்சல் ஃபுல்ஃபில்மென்ட்" என்ற புத்தகத்தையும் அவர் வெளியிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2116634   

*********** 

BR/KV


(வெளியீட்டு அடையாள எண்: 2116839) வருகையாளர் எண்ணிக்கை : 41
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi