ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
உரத்துறைக்கான இறுதி பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.1,91,836.29 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
28 MAR 2025 5:00PM by PIB Chennai
நாட்டில் உரங்களின் பயன்பாடு, உரங்கள் உற்பத்திக்கான மிகப்பெரிய உள்ளீட்டு செலவாக கருதப்படும் இயற்கை எரிவாயுவின் விலை, ஆண்டுதோறும் மாறுகின்ற உரத்திற்கான பொருட்களின் சர்வதேச விலைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உரத்துறைக்கான பட்ஜெட் மதிப்பீடு தயாரிக்கப்படுகிறது. இதன்படி 2024-25 நிதியாண்டின் பட்ஜெட் மதிப்பீட்டில் ரூ.1,68,130.81 கோடியாக பட்ஜெட் ஒதுக்கீடு இருநத்து. நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட துணை மானிய கோரிக்கைகள் மூலம் இறுதி ஒதுக்கீடு ரூ.1,91,836.29 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதே போல், 2024-25 நிதியாண்டில் ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய திட்டத்திற்கு பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.45,000 கோடியாக இருந்தது. இது நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட துணை மானிய கோரிக்கைகள் மூலம் இறுதி ஒதுக்கீடு ரூ.54,310 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தத் திட்டத்திற்கான நிதி குறைக்கப்படமாட்டாது.
மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணை அமைச்சர் திருமதி அனுப்பிரியா பட்டேல் இன்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2116214
***
SMB/SG/DL
(रिलीज़ आईडी: 2116349)
आगंतुक पटल : 47