கலாசாரத்துறை அமைச்சகம்
பாரம்பரிய கலைஞர்களுக்கான நிதியுதவித் திட்டங்கள்
प्रविष्टि तिथि:
27 MAR 2025 4:16PM by PIB Chennai
கிராமப்புறங்கள் உட்பட நாடு முழுவதும் பாரம்பரிய கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்கும் வகையில், மத்திய அரசு கலா சமஸ்கிருத விகாஸ் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மத்திய கலாச்சார அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின் கீழ், கடந்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதும் பல்வேறு கலைஞர்கைள் பயனடைந்துள்ளனர். எனவே, கலை, கலாச்சாரம் தொடர்பான புத்தொழில் மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளைகா கலாச்சார அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.
உலக அரங்கில் நாட்டின் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்காக திட்டம் ஒன்றை கலாச்சார அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. பாரம்பரிய கலை மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட இந்திய கலை வடிவங்களைப் பின்பற்றும் கலைஞர்களுக்கு 'இந்திய விழா' என்ற பதாகையின் கீழ், வெளிநாடுகளில் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். 'இந்தியத் திருவிழாவில்' நடனமாடும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வெளிநாடு அனுப்பப்படும் கலைஞருக்கான அனைத்து செலவுகளையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது. வெளிநாடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் டிஜிட்டல் மீடியா அல்லது ஆன்லைன் மூலம் நடத்தப்படாமல் நேரடியாக நடத்தப்படுகின்றன.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணலாம் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2115751
****
TS/SV/RJ/DL
(रिलीज़ आईडी: 2115951)
आगंतुक पटल : 46