சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கிராமப்புறச் சுற்றுலாவை மேம்படுத்தும் திட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 27 MAR 2025 4:21PM by PIB Chennai

சுற்றுலா அமைச்சகம் அதன் "சேவை வழங்குநர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நாட்டின் நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளில் அரசு நிறுவனங்கள் மூலமாகவும் அங்கீகரிக்கப்பட்ட முகமைகள் மூலமாகவும் சுற்றுலா சேவை வழங்குநர்களுக்கு கல்வி, பயிற்சித் திட்டங்களை நடத்துகிறது.

சிபிஎஸ்பி எனப்படும் சேவை வழங்குநர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சுற்றுலா தொடர்பான தொழில்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, திறன் பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுற்றுலா, கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

----

TS/PLM/KPG/KR/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2115907) வருகையாளர் எண்ணிக்கை : 50
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी