ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜல் ஜீவன் மற்றும் தூய்மை இந்தியா இயக்கத்தின் இலக்குகள்

Posted On: 27 MAR 2025 2:58PM by PIB Chennai

நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் பாதுகாப்பான குடிநீரை குழாய் வழி போதுமான அளவில், வழங்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக, ஆகஸ்ட் 2019-ல் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும் ஜல் ஜீவன் இயக்கத்தை மத்திய அரசு தொடங்கியது. மத்திய அரசு மாநிலங்களுக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்கி ஆதரிக்கிறது.

2019-20 முதல் 2023-24 வரை ஐந்து ஆண்டுகளுக்கு ஜல் ஜீவன் இயக்கத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.  இந்த இயக்கத்தைத் தொடரும் வகையில் நிதியமைச்சர் 2025 பட்ஜெட் உரையின் போது இந்த இயக்கம் 2028-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார். நீட்டிக்கப்பட்ட காலத்தில், மக்கள் பங்கேற்பு மூலம் கிராமப்புறங்களில் குழாய் மூலம் குடிநீர் வழங்கும்  திட்டங்களின் உள்கட்டமைப்புகளுக்கும் அது தொடர்பான செயல்பாடுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு மீதமுள்ள பணிகளை முடிப்பதில் கவனம் செலுத்தப்படும்.

கிராமப்புறத் தூய்மை இந்தியா இயக்கம் (ஊரகம்) 2019 அக்டோபர் 2ம் தேதிக்குள் கிராமப்புற பகுதிகளில் திறந்தவெளிக் கழிப்பிடங்களை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டு 2014 அக்டோபர் 2  அன்று தொடங்கப்பட்டது. கிராமப்புறத் தூய்மை இந்தியா இயக்கம்  மக்கள் இயக்கமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. கிராமப்புறத் தூய்மை இந்தியா இயக்கத்தில் இதுவரை  10 கோடிக்கும் அதிகமான தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த இயக்கத்தின் இரண்டாம் கட்டத்தில்  அதாவது 2020-21 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலைத்தன்மையை(ஓ.டி.எஃப்.பிளஸ்) மேலும் வலுப்படுத்தி திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை அதிக அளவில் மேற்கொள்ளும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு வி. சோமண்ணா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

---

(Release ID: 2115688)

TS/PLM/KPG/KR


(Release ID: 2115841) Visitor Counter : 32


Read this release in: English , Urdu , Hindi