ஜல்சக்தி அமைச்சகம்
இல்லம் தோறும் குழாய்வழிக் குடிநீர் இணைப்பு வழங்குவதில் ஜல் ஜீவன் இயக்கத்தின் தாக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
27 MAR 2025 3:00PM by PIB Chennai
நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் பாதுகாப்பான குடிநீரை குழாய் வழி போதுமான அளவில், வழங்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக, ஆகஸ்ட் 2019-ல் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும் ஜல் ஜீவன் இயக்கத்தை மத்திய அரசு தொடங்கியது. மத்திய அரசு மாநிலங்களுக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்கி ஆதரிக்கிறது.
இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, கிராமப்புற வீடுகள் குழாய் வழிக் குடிநீர் பெறுவதில் நாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2019-ல் 3.23 கோடி (16.71%) கிராமப்புற வீடுகளில் மட்டுமே குழாய் நீர் இணைப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதுவரை, 20.03.2025 நிலவரப்படி, சுமார் 12.30 கோடி கூடுதல் கிராமப்புற வீடுகளுக்கு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய் நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, 20.03.2025 நிலவரப்படி, நாட்டில் உள்ள 19.36 கோடி கிராமப்புற வீடுகளில், உத்தேசமாக 15.53 கோடி (80.22%) வீடுகளுக்கு குழாய் வழிக் குடிநீர் வழங்கப்பட்டிருந்த பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய் நீர் இணைப்புகளை வழங்குவதில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்த விவரங்கள் https://ejalshakti.gov.in/jjmreport/JJMIndia.aspx என்ற இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு வி. சோமண்ணா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
-----
(Release ID: 2115692)
TS/PLM/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2115800)
வருகையாளர் எண்ணிக்கை : 84