மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
கால்நடை உற்பத்தித்திறனை மேம்படுத்தல்
Posted On:
26 MAR 2025 2:45PM by PIB Chennai
நாட்டின் கால்நடை உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்காக மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறைக்கு கடந்த 5 ஆண்டுகளில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கால்நடைகளுக்கு உரிய காலத்தில் செலுத்துவதற்கு தடுப்பூசிகள் தட்டுப்பாடின்றி கிடைக்க கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கால்நடைகளின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு எதிராக நோய்த்தடுப்பு தடுப்பூசிகளை செலுத்துதல், கால்நடை சேவைகளின் திறனை மேம்படுத்துதல், நோய் கண்காணிப்பு மற்றும் கால்நடை உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், பயிற்சி, விளம்பரம், விழிப்புணர்வு போன்ற முயற்சிகளை ஊக்குவித்தல் ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும். இத்திட்டத்தின் கீழ், கோமாரி நோய், புருசெல்லோசிஸ், பெஸ்டே டெஸ் பெட்டிட்ஸ் ரூமினண்ட்ஸ், கிளாசிக்கல் பன்றிக் காய்ச்சல் ஆகிய நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகளுக்காக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசால் முழுமையாக நிதியுதவி அளிக்கப்படுகிறது.
தரமான சோதனை செய்யப்பட்ட தடுப்பூசிகள் சரியான நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் உள்ள இடைவெளியைக் குறைக்க இது வழிவகுக்கிறது. விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தடுப்பூசி முயற்சிகளின் வெற்றிக்கு பங்களிப்பதாக உள்ளது.
மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2115188
---
TS/SV/KPG/KR
(Release ID: 2115306)
Visitor Counter : 17