உள்துறை அமைச்சகம்
பனிப்பாறை சரிவுகளின் தாக்கம்
Posted On:
25 MAR 2025 1:44PM by PIB Chennai
இமாலயப் பகுதிகளில் மனித உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் பெருமளவு பாதிப்புகளை ஏற்படுத்துகின்ற பனிப்பாறை சரிவுகள் பற்றி அரசு விழிப்புடன் உள்ளது. பனிப்பாறை சரிவுகள் இயற்கை சீற்றங்களால் ஜம்மு காஷ்மீர், இமாசலப்பிரதேசம், உத்தராகண்ட், அருணாசலப்பிரதேசம் போன்ற இடங்களில் ஏற்படுகின்றன.
ஆபத்தான பகுதிகளில் பனிப்பாறைச் சரிவுகள் பற்றி முன்கூட்டிய தகவல் மற்றும் முன்னறிவிப்புக்கான தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் அரசு தீவிரமாக உள்ளது. பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, பனிப்பாறை சரிவு குறித்து முன்னெச்சரிக்கை செய்யும் தேசிய அளவிலான அமைப்பாக செயல்படுகிறது. மேலும், சூழ்நிலையின் தற்போதைய நிலவரங்கள் பற்றிய தகவல்களை 6 மணி நேரத்திற்கு ஒரு முறை இந்திய வானிலைத் துறை வழங்குகிறது.
முன்னறிவிப்புத் திறன்களை மேம்படுத்த பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய பகுதிகளில் தானியங்கி வானிலை மையங்கள், டாப்ளர் ராடார்கள் ஆகியவை நிறுவப்பட்டுள்ளன.
நாட்டில் உள்ள 36 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு குறுஞ்செய்திகள், எச்சரிக்கை ஒலி எழுப்புதல், இணையதளம் போன்ற ஊடகங்கள் மூலம் பேரிடர்கள் தொடர்பான எச்சரிக்கைகள் செய்யப்படுகின்றன. இதற்கு ரூ.454.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2114752
***
TS/SMB/KPG/KR/DL
(Release ID: 2114979)