இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
தோனோக்ன்யூ வட்டாரம் மாற்றம் மற்றவர்களுக்கு உத்வேகம்: மத்திய அமைச்சர் திருமதி. ரக்ஷா காட்சே
Posted On:
22 MAR 2025 7:11PM by PIB Chennai
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை இணை அமைச்சர் திருமதி. ரக்ஷா நிகில் காட்சே, நாட்டின் மிக தொலைதூர மாவட்டங்களில் ஒன்றான நாகாலாந்தின் நோக்லாக் பகுதிக்கு சென்றார். இந்தப் பகுதிக்கு சென்ற முதல் மத்திய அமைச்சர் இவர் ஆவார். அவரது பயணத்தின் போது, நோக்லாக் துணை ஆணையர் திரு அரிகும்பாவினால் மாவட்டத்தின் வளர்ச்சி குறித்து அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது. முன்னேற விரும்பும் வட்டாரமான தோனோக்ன்யுயுவின் முன்னேற்றத்தையும் அவர் ஆய்வு செய்தார். சமூகப் பிரதிநிதிகளுடன் அவர் உரையாடினார், மேலும் நோக்யான் கிராமம், மாவட்ட மருத்துவமனை மற்றும் நோக்லாக்கின் பல ஒழுங்குமுறை விளையாட்டு வளாகம் உள்ளிட்ட முக்கிய தளங்களைப் பார்வையிட்டார்.
"எல்லை மாவட்டம்" என்று அழைக்கப்படும் நோக்லாக், நாகாலாந்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 55,434 மொத்த மக்கள்தொகை கொண்ட மாவட்டம், தோராயமாக 1,152 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது. 14,630 குடும்பங்களைக் கொண்ட இது, பெரும்பாலும் கிராமப்புறமாகவும், கியாம்னியுங்கன் நாகா பழங்குடியினரின் தாயகமாகவும் உள்ளது. குறைந்த மக்கள் தொகை அடர்த்தி மற்றும் தினை, மக்காச்சோளம், பீன்ஸ், கிழங்கு மற்றும் ஜாப்ஸ் டியர் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட விவசாயப் பொருளாதாரம் ஆகியவை நோக்லாக்கின் பண்புகளாகும். 2022 இல், பொருளாதார நிலைத்தன்மைக்கான நிலையான வளர்ச்சி விருது நோக்லாக் தலைசிறந்த படைப்புகளுக்கு வழங்கப்பட்டது.
உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து, கல்வி, விவசாயம், சமூக மேம்பாடு மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு போன்ற கருப்பொருள்களின் கீழ் 40 முக்கிய வளர்ச்சிக் குறியீடுகளில் தோனோக்னியூ வட்டாரத்தின் முன்னேற்றத்தை திருமதி காட்சே மதிப்பீடு செய்தார். முன்னதாக குறைந்த ஆர்வமுள்ள 500 வட்டாரங்களில் மார்ச் 2023 இல் 465 வது இடத்திலிருந்து செப்டம்பர் 2024 இல் 85 வது இடத்திற்கு இந்த வட்டாரம் உயர்ந்துள்ளது.
***************
PKV/KV
(Release ID: 2114146)
Visitor Counter : 17