பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முன்னாள் ராணுவத்தினருக்கான சிறப்பு கண்புரை சிகிச்சை முகாமை ராணுவம் நடத்தியது

Posted On: 22 MAR 2025 7:01PM by PIB Chennai

 

மேற்கு வங்கத்தில் உள்ள பெங்டுபி ராணுவ மைய மருத்துவமனையில் சிறப்பு கண்புரை சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமை 20 மார்ச் 2025 அன்று கிழக்கு கட்டளையின் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ஆர்.சி.திவாரி தொடங்கி வைத்தார். 

350 க்கும் மேற்பட்ட முன்னாள் வீரர்கள், அவர்களைச் சார்ந்தவர்களுக்கு இதில் பரிசோதனை, சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பார்வையிழப்பையிம் பார்வைக் குறைபாட்டையும் கட்டுப்படுத்துவதற்கான தேசிய திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இந்த முயற்சி, சுகாதாரம், சமூக நலனுக்கான இந்திய ராணுவத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது.

முகாமைத் தொடங்கி வைத்துப் பேசிய, லெப்டினன்ட் ஜெனரல் ஆர்.சி.திவாரி மருத்துவக் குழுவின் நிபுணத்துவத்தையும் அர்ப்பணிப்பையும் பாராட்டினார், அதன் பணியாளர்கள், வீரர்கள், பரந்த சமூகத்தின் நல்வாழ்வுக்கான ராணுவத்தின் உறுதிப்பாட்டை அவர் எடுத்துரைத்தார். முன்னாள் படைவீரர்கள், அவர்களது குடும்பங்களுக்கு சுகாதார அணுகலை மேம்படுத்துவதில் இதுபோன்ற முயற்சிகளின் முக்கியத்துவத்தை அவர் விளக்கினார்.

மேற்கு வங்க ஆளுநர் திரு சி.வி.ஆனந்த போஸின் வேண்டுகோளைத் தொடர்ந்து, பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த முகாம் நடத்தப்பட்டது. இது பிராந்தியத்திற்கு உயர்தர கண் சிகிச்சையை விரிவுபடுத்துவதற்கு அரசுக்கும் ராணுவத் தலைமைக்கும் இடையிலான கூட்டு முயற்சியை இது பிரதிபலிக்கிறது.

டேராடூன், உத்தரகண்ட், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் மிகவும் வெற்றிகரமாக நடத்தப்பட்ட முகாம்களைத் தொடர்ந்து, ராணுவம் ஏற்பாடு செய்த மூன்றாவது முகாம் இதுவாகும்.

***

PLM/KV

 

 


(Release ID: 2114064) Visitor Counter : 27


Read this release in: English , Urdu , Hindi