ஊரக வளர்ச்சி அமைச்சகம்
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டம் விரிவாக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
21 MAR 2025 5:35PM by PIB Chennai
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதிச் சட்டம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தது நூறு நாட்களுக்கு உத்தரவாதமான ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பை வழங்குகிறது. இதன் மூலம் நாட்டின் கிராமப் பகுதிகளில் உள்ள குடும்பங்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பை மேம்படுத்த இது வழிவகை செய்கிறது.
வறட்சி, இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட கிராமப்புறங்களில் ஒரு நிதியாண்டில் கூடுதலாக 50 நாட்கள் வரை ஊதியத்துடன் கூடிய வேலைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இச்சட்டத்தின்படி, மாநில அரசுகள் தங்களது சொந்த நிதியிலிருந்து உத்தரவாதம் அளிக்கப்பட்ட காலத்திற்கு அப்பால் கூடுதல் வேலை நாட்களை வழங்கலாம்.
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ், 2025 மார்ச் 18-ம் தேதி வரை 7.61 லட்சம் நீர்வள பாதுகாப்பு மற்றும் நீர் சேகரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளன.
இந்தத் தகவலை மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் திரு. கமலேஷ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2113754
***
TS/GK/RJ/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2113832)
வருகையாளர் எண்ணிக்கை : 59