எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எஃகு இறக்குமதிக்கான தடையில்லா சான்றிதழ்

Posted On: 21 MAR 2025 1:52PM by PIB Chennai

உள்நாட்டில் தரமான எஃகு  உற்பத்தி செய்வது அல்லது வெளி நாடுகளிலிருந்து அதனை இறக்குமதி செய்வது என்பதை உறுதி செய்யும் வகையில், இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS) மத்திய எஃகு அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, பயன்பாட்டாளர்களுக்கும், மக்களுக்கும் தரமான எஃகு  கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், 151 இந்திய தரநிலைகள் அறிவிக்கையாக வெளியிடப்பட்டு அவை எஃகு அமைச்சகத்தால் தரக் கட்டுப்பாட்டு ஆணைகளாகப் பின்பற்றப்பட்டுள்ளன. வெளி நாடுகளிலிருந்து எஃகு இறக்குமதி செய்வதற்கு இந்திய தர நிர்ணய அமைவனத்தின்  உரிமம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்திய தர நிர்ணய அமைவனத்தின் தரநிலைகளின் கீழ்  கொண்டுவரப்படாத சில வகையான எஃகு  உலோகத்தை மத்திய எஃகு அமைச்சகத்தின் தடையில்லா சான்றிதழுடன் (என்ஓசி) இறக்குமதி செய்து கொள்ள முடியும். அடுத்த ஆறு மாத காலத்திற்கு இறக்குமதி செய்ய உத்தேசித்துள்ள அளவுகளின் அடிப்படையில் இந்த தடையில்லா சான்று முன்கூட்டியே வழங்கப்படுகிறது.  தடையில்லா சான்று கோரி விண்ணப்பிப்பவர்கள் தங்களது விண்ணப்பங்களை எஃகு இறக்குமதி கண்காணிப்பு அமைப்பின் இணையதளம் வாயிலாக ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். முன்கூட்டியே வழங்கப்படும் தடையில்லா சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களை மத்திய எஃகு அமைச்சகம் குறிப்பிட்ட  காலக்கெடுவுக்குள் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின்படி வழங்குகிறது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் எஃகு மற்றும் கனரகத் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு பூபதிராஜு சீனிவாச வர்மா இதனைத்  தெரிவித்துள்ளார்.

***

(Release ID: 2113588)

TS/SV/AG/RR


(Release ID: 2113775)
Read this release in: English , Urdu , Hindi