வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் 2.0-ன் கீழ் மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழுவின் முதலாவது ஆலோசனைக் கூட்டத்திற்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகச் செயலாளர் தலைமை தாங்கினார்
प्रविष्टि तिथि:
21 MAR 2025 1:00PM by PIB Chennai
2025ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதி நடைபெற்ற பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் 2.0-ன் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழுவின் முதலாவது ஆலோசனை கூட்டம் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளர் திரு ஸ்ரீனிவாஸ் கடிகிதலா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 3.53 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டுவதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், பீகார், ஹரியானா, ஜம்மு-காஷ்மீர், ஒடிசா, புதுச்சேரி, ராஜஸ்தான், தெலங்கானா, உத்தரப்பிரதேசம் ஆகிய 10 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 3,52,915 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை ஊக்குவிப்பதுடன், அங்கீகரிக்கப்பட்ட வீடுகளில், 2.67 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளைப் பெண்கள் பெயரில் தனித்து வசிக்கும் பெண்கள், விதவைகள் உட்பட வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இதில் 90 வீடுகள் திருநங்கைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் அனுமதிக்கப்பட்ட வீடுகளில், 80,850 வீடுகள் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும், 15,928 வீடுகள் பழங்குடியினருக்கும், 2,12,603 வீடுகள் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2113557
***
TS/SV/AG/RR
(रिलीज़ आईडी: 2113712)
आगंतुक पटल : 59