கனரகத் தொழில்கள் அமைச்சகம்
சக்கர நாற்காலியை ஏற்றும் வகையில் தனியார் வாகனக் கொள்கையின் கீழ் மாற்றியமைக்கப்பட்ட வாகனப் பதிவு
Posted On:
21 MAR 2025 1:52PM by PIB Chennai
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, 2020 ஜனவரி 1-ம் தேதி முதல் 2025 மார்ச் 19 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 96,265 வாகனங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
40 சதவீதத்திற்கு சமமான அல்லது அதற்கு மேற்பட்ட உடல் பாதிப்புள்ள மாற்றுத்திறனாளி நபர்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி சலுகையுடன் கார்கள் வாங்குவதற்கு கனரக தொழில்கள் அமைச்சகம் சான்றிதழ்களை வழங்குகிறது. இந்திய மோட்டார் ஸ்தாபனம் நிறுவனத்தால் வழங்கப்பட்ட சான்றிதழ்களின் அடிப்படையில் மற்றும் ஜிஎஸ்டி வரிச்சலுகையுடன் விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களும் மோட்டார் வாகன சட்டத்தின்படி "மாற்றியமைக்கப்பட்ட வாகனம்" என்று பதிவு செய்யப்படும்.
இந்தத் தகவலை மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் எஃகு மற்றும் கனரகத் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு. பூபதிராஜு சீனிவாச வர்மா தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2113587
***
TS/GK/RJ/RR
(Release ID: 2113693)
Visitor Counter : 41