அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

நாடாளுமன்றக் கேள்வி: ஐ-ஸ்டெம் திட்டத்தின் கீழ் “ஒரு மாவட்டம், ஒரு உபகரணம்” விநியோக விவரங்கள்

Posted On: 20 MAR 2025 4:56PM by PIB Chennai

ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கல்விக் கழகங்களில்  பொது நிதி மூலம்  உருவாக்கப்பட்ட அறிவியல் உபகரணங்கள் பற்றிய தகவலைப் பகிர்ந்து கொள்ளும் தேசிய இணைய போர்ட்டல் ஐ-ஸ்டெம் (இந்திய அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் நிறுவன வரைபடம்) விளங்குகிறது.

நாடு முழுவதும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புத்தொழில்கள் இந்த வளங்களை பயன்படுத்துவது தொடர்பான விவரங்களை இந்த போர்ட்டல் வழங்குகிறது. இதில் ஏற்கனவே 34,000 பயனர்கள் பதிவு செய்துள்ளனர்.  இந்தியா முழுவதும் இருந்து 3300 நிறுவனங்களால் 26,000-த்திற்கும் அதிகமான உபகரணங்கள் பற்றிய விவரங்கள் இதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

2025, மார்ச் 13 நிலவரப்படி, ஐ-ஸ்டெம் புள்ளி விவரங்களில் தமிழ்நாட்டில் 3235 உபகரணங்களும், புதுச்சேரியில் 51 உபகரணங்களும் செயல்பாட்டில் உள்ளன.

ஐ-ஸ்டெம் இணையப்பக்கத்தில் 192 மாவட்டங்களைச் சேர்ந்த நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. தமிழ்நாட்டில் பதிவு செய்துள்ள மாவட்டங்கள் மற்றும் விநியோகிக்கப்பட்ட சாதனங்களின்    எண்ணிக்கை விவரம்:

சென்னை- 1395, கோயம்புத்தூர் – 481, திருச்சிராப்பள்ளி – 461, காஞ்சிபுரம் – 193, தஞ்சாவூர் – 130, நாமக்கல்- 114,  விருதுநகர் – 111, விழுப்புரம் – 56, சிவகங்கை – 53, வேலூர் – 52, கடலூர் – 46, மதுரை – 40,  சேலம்- 34, தேனி- 30, திண்டுக்கல் -19, கன்னியாகுமரி – 14, திருநெல்வேலி – 12, திருவாரூர் – 5, தூத்துக்குடி – 5, திருவள்ளூர் – 4, புதுக்கோட்டை – 1.

புதுச்சேரிக்கு 38 சாதனங்களும், காரைக்காலுக்கு 13 சாதனங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன.

மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று மாநிலங்களவையில் எழுத்துமூலம் அளித்த பதிலில் இந்த தகவலை தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2113274

***

 TS/SMB/AG/DL


(Release ID: 2113379) Visitor Counter : 18


Read this release in: English , Urdu , Hindi